நாட்டின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம் தார் அர்மடா உட்பட XUV400 ஃபேஸ்லிஃப்ட், XUV300 ஃபேஸ்லிஃப்ட், XUV300.e ஆகியவற்றுடன் புதிய XUV.e8 எலக்ட்ரிக் எஸ்யூவி என பல்வேறு மாடல்களுடன் 2024 ஆம் ஆண்டு சந்தையை எதிர்கொள்ள உள்ளது.
Mahindra Thar Armada
விற்பனையில் உள்ள 3 கதவுகளை பெற்ற தார் அடிப்படையில் 5 கதவுகளை பெற்ற மஹிந்திரா தார் அர்மடா எஸ்யூவி ஆனது மிக நேர்த்தியான புதுப்பிக்கப்பட்ட முன்புற தோற்றம் கிரில் மாற்றியமைக்கப்பட்டு, புதிய எல்இடி ஹெட்லைட் உடன் இன்டிரியரில் அகலமான 10 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றிருக்கலாம்.
2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5000 RPMல் 150hp பவர் மற்றும் 1500-3000rpm-ல் 320 Nm டார்க் (ஆட்டோமேட்டிக்) மற்றும் 1250-3000rpm-ல் 300 Nm டார்க் (மேனுவல்) வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
அதிகபட்சமாக 3750 RPM -ல் 130 hp பவர் மற்றும் 300 Nm டார்க் ஆனது 1600 – 2800 RPM -ல் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் மஹிந்திரா தார் அர்மடா எஸ்யூவி விலை ரூ.15.50 லட்சத்தில் துவங்கலாம்.
2024 Mahindra XUV400
விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி 400 எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் புதுப்பிக்கப்பட்ட டிசைன் மொழியை மஹிந்திரா BE கார்களில் இருந்து பெறக்கூடும். மற்றபடி, தற்பொழுது உள்ள பேட்டரி ஆப்ஷன் தொடரலாம்.
34.5kWh மற்றும் 39.4kWh என இரண்டும் 150hp மற்றும் 310Nm டார்க் வழங்குகின்றது. XUV400 ஆனது 8.3 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும்.
குறைந்த சக்தி கொண்ட 34.5kWh பேட்டரி பெற்ற XUV400 கார் 375 கிமீ ரேஞ்சு கொண்டுள்ளது. அடுத்தப்படியாக, 39.4kWh பேட்டரியுடன் இந்திய ஓட்டுநர் சான்றிதழ்படி (MIDC- Indian driving cycle) ஒருமுறை சார்ஜ் செய்தால் 456கிமீ ரேஞ்ச் பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வரவுள்ள எக்ஸ்யூவி400 விலை ரூ.16 லட்சத்தில் துவங்க உள்ளது.
2024 Mahindra XUV300 Facelift
மேம்படுத்தப்பட்ட புதிய மஹிந்திரா XUV300 காரில் புதிய வடிவமைக்கப்பட்ட தோற்றத்தை பெற்று எல்இடி ஹெட்லைட் உடன் புதிய பம்பர் பெற உள்ளது. 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள மற்ற போட்டியாளர்களை போல பல்வேறு வசதிகளை பெற உள்ள இந்த மாடல் ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுவது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.
110hp பவர் மற்றும் 131hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல், 117hp பவர், வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.
அதிக பவரை வழங்குகின்ற 1.2 லிட்டர் TGDI என்ஜினில் ஏசியன் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற உள்ளது. எக்ஸ்யூவி 300 காரின் டாப் வேரியண்டில் பனோரோமிக் சன்ரூஃப் ஆனது பெற உள்ளது. மற்றபடி, இன்டிரியரில் பல்வேறு மேம்பாடுகள், கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களும் இடம்பெறலாம்.
2024 ஆம் ஆண்டின் துவக்க மாதம் விற்பனைக்கு வெளியாக உள்ள புதிய மஹிந்திரா XUV300 விலை ரூ. 8 லட்சத்துக்கு கூடுதலான விலையில் வெளியாகலாம்.
2024 Mahindra XUV300 EV
விற்பனையில் உள்ள மஹிந்திரா XUV300 அடிப்படையில் எலக்ட்ரிக் எஸ்யூவி குறைந்த விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதனால் தோற்ற அமைப்பில் புதிய எக்ஸ்யூவி 300 போலவே அமைந்திருக்கலாம். 34.5kWh பேட்டரி பெற்ற XUV300 கார் 375 கிமீ ரேஞ்சு கொண்டதாக வரலாம்.
விற்பனைக்கு 2024 மத்தியில் வரவுள்ள மஹிந்திரா XUV300.e காரின் விலை ரூ.13 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது.
Mahindra XUV.e8
விற்பனையில் உள்ள XUV700 எஸ்யூவி அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு இறுதி மாதங்களில் வரவுள்ள மஹிந்திரா XUV.e8 ஆனது INGLO பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள மாடல் 60-80Kwh லித்தியம் ஐயன் பேட்டரி பெற்று 550 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துவதுடன் டாப் ஸ்பீடு 200Km/h ஆக இருக்கலாம். XUV.e8 விலை ரூ.30 லட்சத்துக்கும் கூடுதலாக அமையலாம்.
மேலும் படிக்க – 2024 வரவிருக்கும் மாருதி சுசூகி கார் பட்டியல்