நிசான் இந்தியாவில் விற்பனை செய்து வருகின்ற ஒரே மாடலான மேக்னைட் எஸ்யூவி ஃபேஸ்லிஃபட் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்படலாம். பல்வேறு மேம்பாடுகளுடன் ADAS பாதுகாப்பு வசதிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச சந்தைக்கும் ஏற்றுமதி செய்ய மேக்னைட் எஸ்யூவி திட்டமிடப்பட்டுள்ளது.
2024 Nissan Magnite Facelift
மேக்னைட் எஸ்யூவி காரில் தொடர்ந்து 1.0 லிட்டர் B4D NA பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. தற்பொழுது இந்த என்ஜினில் 5 வேக ஏஎம்டி அல்லது EZ-Shift கியர்பாக்ஸ் வந்துள்ளது.
மேக்னைட் எஸ்யூவி காரில் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
எனவே, மேலே வழங்கப்பட்டுள்ள என்ஜின் பவர் மற்றும் டார்க் விருப்பங்களில் மாற்றம் இருக்காது.
தோற்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட பம்பர், கிரில் உட்பட எல்இடி ஹெட்லைட் பெறுவதற்கான புதிய அலாய் வீல் உடன் பின்புற பம்பர் எல்இடி லைட்களும் புதுப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இன்டிரியரில் புதுப்பிக்கப்பட்ட டேஸ்போர்டு உடன் ஃபீரி ஸ்டாண்டிங் முறையிலான 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்படலாம்.
குறிப்பாக தற்பொழுது இந்த பிரிவில் உள்ள வெனியூ, சொனெட் கார்கள் ADAS நுட்பத்துடன் வந்துள்ளதால், மேக்னைட் மாடல் ADAS நுட்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது.
2024 ஆம் ஆண்டில் நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியாக உள்ளது. அடுத்து, நிசான் எக்ஸ்-ட்ரையில் உட்பட ரெனால்ட் ட்ரைபர் அடிப்படையில் 7 இருக்கை எம்பிவி 2024 இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு வெளியாகலாம்.