கியா இந்தியா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள சொனெட் எஸ்யூவி காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் இடம்பெற்றுள்ள வேரியண்டுகள் மற்றும் பல்வேறு முக்கியமான வசதிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மீண்டும் டீசல் என்ஜினில் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ள சொனெட் எஸ்யூவி மாடலில் தொடர்ந்து ஒன்றாம் தரநிலை நவீன ஓட்டுநர் உதவி அமைப்பு (ADAS) கொண்டு வரப்பட்டுள்ளது.
2024 Kia Sonet Variants List
2024 கியா சொனெட் காரில் டெக் லைன், ஜிடி லைன் மற்றும் X-Line என மூன்று விதமான அடிப்படையில் HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line ஆகிய 7 வேரியண்டுகளில் கிடைக்க உள்ள நிலையில் முன்பதிவு டிசம்பர் 20 ஆம் தேதி துவங்க உள்ளது.
82 hp பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது 5-ஸ்பீடு மேனுவல் கொடுக்கப்பட்டுள்ளது. 118 hp பவர் மற்றும் 172Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் GDI 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கிடைக்கும். இறுதியாக, 114 hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6 வேக மேனுவல், 6-ஸ்பீடு iMT மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் வரவுள்ளது.
Sonet HTE
1.2 லிட்டர் பெட்ரோல் 5 வேக MT மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக MT ஆரம்ப நிலை வேரியண்டில்
- ஆறு ஏர்பேக்குகள்
- EBD உடன் ABS
- பின்புற பார்க்கிங் சென்சார்
- சீட்பெல்ட் நினைவூட்டல் அமைப்பு
- வேக எச்சரிக்கை அமைப்பு
- BAS, ESC, HAC, VSM மற்றும் Highline TPMS
- ஹாலஜென் ஹெட்லேம்ப்
- 15 அங்குல ஸ்டீல் வீல்
- கருப்பு நிற உட்புறத்துடன் கூடிய அரை-லெதரெட் இருக்கைகள்
- முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்
- சில்வர் பிரேக் காலிப்பர்கள்
- துருவ வகை ஆண்டெனா
- 4.2-இன்ச் எம்ஐடி
- டைப்-சி சார்ஜிங் போர்ட்கள்
- 12V பவர் அவுட்லெட்
- முன் பவர் ஜன்னல்கள்
- நிலையான ஆர்ம்ரெஸ்ட்
- மேனுவல் ஏசி
- பின்புற ஏசி வென்ட்கள்
Sonet HTK
1.2 லிட்டர் பெட்ரோல் 5 வேக MT மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக MT பெற்று HTE வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,
- 16-இன்ச் டூயல்-டோன் ஸ்டீல் வீல்
- ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடு சுவிட்சுகள்
- ஃபாலோ மீ ஹெட்லைட்
- 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
- டிரைவர் இருக்கைக்கு உயரம் சரிசெய்தல்
- 6 ஸ்பிக்கர் சவுண்ட் சிஸ்டம்
- ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
- ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்
Sonet HTK+
1.2 லிட்டர் பெட்ரோல் 5 வேக MT, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 6 வேக iMT மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக MT பெற்று HTK வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,
- எல்இடி லைட் பார், பனிவிளக்கு மற்றும் ரன்னிங் விளக்குகள்
- ஸ்மார்ட் கீயுடன் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் (1-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் மட்டும்)
- ஆட்டோமேட்டிக் ஏசி கட்டுப்பாடு
- டிரைவர் இருக்கை ஜன்னலில் ஒரு டச் ஆட்டோ விண்டோஸ்
- பின்புற டிஃபோகர்
- புஷ்-பொத்தான் தொடக்கம்/நிறுத்தும்ஒருங்கிணைந்த டர்ன் சிக்னல்களுடன் கூடிய மின்சார மடிப்பு ORVM
- ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
- ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்
- எலக்ட்ரிக் சன்ரூஃப் (1.0 imt)
Sonet HTX
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 6 வேக iMT அல்லது 7 வேக DCT மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக MT அல்லது 6 வேக iMT அல்லது 6 வேக AT பெற்று HTK+ வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,
- எல்இடி ஹெட்லைட்
- லெதரெட்-சுற்றப்பட்ட ஸ்டீயரிங், கியர் நாப் மற்றும் கதவு ஆர்ம்ரெஸ்ட்
- பின் இருக்கைகளுக்கு 60:40 வசதி
- க்ரூஸ் கட்டுப்பாடு
- முன்பக்க காற்றோட்ட இருக்கைகள் (DCT உடன் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் iMT மற்றும் AT வகைகளுடன் 1.5-லிட்டர் டீசல்)
- ISOFIX குழந்தை இருக்கைகள்
- பின்புற டிஸ்க் பிரேக்குகள்
- ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிஃப்டர்
- ஆட்டோமேட்டிக் மாடலில் டிராக்ஷன் மற்றும் மல்டி-டிரைவ் மோட்
- மூன்று விதமான மாறுபட்ட இன்டிரியர் நிறங்கள்
Sonet HTX+
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 6 வேக iMT மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக MT அல்லது 6 வேக iMT பெற்று HTX வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,
- 16-இன்ச் அலாய் வீல்
- ஆம்பியன்ட் எல்இடி விளக்குகள்
- பழுப்பு நிற இன்ஷர்ட் கருப்பு இண்டிரியர்
- நேவிகேஷன் உடன் 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட்
- 10.25 இன்ச் டிஜிட்டல் கிளஸ்ட்டர்
- ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி
- காற்று சுத்திகரிப்பான்
- 70க்கு மேற்பட்ட கனெக்டேட் கார் தொழில்நுட்பம்
- முன் வரிசையில் காற்றோட்டமான இருக்கைகள்
- 4-வழி இயங்கும் ஓட்டுநர் இருக்கை (iMT 1.5-லிட்டர் டீசலில்)
- போஸ் 7-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்
- ரிமோட் என்ஜின் ஸ்டார்ட்
- 60:40 இருக்கை வசதி
- அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்
Sonet GTX+
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 7 வேக DCT மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக AT பெற்று HTX+ வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,
- 16 அங்குல அலாய் வீல்
- ஜிடி லோகோ மற்றும் பேட்ஜிங்
- லெதேரேட் கருப்பு நிற இருக்கை
- மெட்டாலிக் ஸ்கிட் பிளேட்
- வெள்ளை இன்ஷர்ட்டுன் கருப்பு நிற இன்டிரியர்
- 360 டிகிரி கேமரா
- பிளைன்ட் வியூ மானிட்டர்
- நிலை 1 ADAS
- பளபளப்பான கருப்பு நிற ஏசி வென்ட்ஸ்
Sonet X-Line
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 7 வேக DCT மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக AT பெற்று GTX+ வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,
- சொனெட் லோகோவுடன் லெதரெட் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல்
- பச்சை இன்ஷர்ட்டுடன் கருப்பு நிற இன்டிரியர்
- அனைத்து கதவுகளிலும் ஒரு டச் பவர் விண்டோஸ்
- மேட் கிராஃபைட் நிறம்
- 360 டிகிரி கேமரா
- நிலை 1 ADAS
- பிளைன்ட் வியூ மானிட்டர்
- பிரத்தியேகமான கிரில்
- கருப்பு நிறத்திலான ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்
கியா சொனெட் எஸ்யூவி முதல்நிலை ADAS பாதுகாப்பில் முன்னோக்கி மோதல் எச்சரிக்கை மற்றும் முன்னோக்கி மோதல் தவிர்க்க உதவும் வகையில் கார்/ பாதசாரி/ சைக்கிள் ஓட்டுபவர், லேன் கீப் அசிஸ்ட் • லேன் ஃபாலோ அசிஸ்ட், லேன் புறப்பாடு எச்சரிக்கை, ஹை பீம் அசிஸ்ட், ஓட்டுனர் கவன குறைவை எச்சரிக்கை, வாகனம் புறப்படும் எச்சரிக்கை ஆகியவற்றை பெற்றுள்ளது.