மிக கடும் போட்டியாளர்களை பெற்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள மஹிந்திரா XUV300 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்பட உள்ளது.
ஏற்கனவே, டாடா நெக்ஸான், கியா சொனெட் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட மாடல்களுடன் வென்யூ, பிரெஸ்ஸா, மேக்னைட் மற்றும் கிகர் ஆகியவற்றை எக்ஸ்யூவி 300 எதிர்கொள்ள உள்ளது.
2024 Mahindra XUV300 Facelift
போட்டியாளர்களிடம் உள்ள ADAS வசதியை பெறுமா என உறுதியாக தெரியவில்லை, மற்றபடி புதிய எக்ஸ்யூவி300 காரில் 110hp பவர் மற்றும் 131hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல், 117hp பவர், வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.
அதிக பவரை வழங்குகின்ற 1.2 லிட்டர் TGDI என்ஜினில் ஏசியன் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற உள்ளது.
எக்ஸ்யூவி 300 காரின் டாப் வேரியண்டில் பனோரோமிக் சன்ரூஃப் ஆனது பெற உள்ளது. மற்றபடி, இன்டிரியரில் பல்வேறு மேம்பாடுகள், கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களும் இடம்பெறலாம்.
வரும் ஜனவரி 2024 மாத இறுதி அல்லது பிப்ரவரி மாதம் 2024 மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இதுதவிர XUV300.e என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் மாடலும் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.