ஜனவரி 1, 2024 முதல் ஃபோக்ஸ்வேகன் இந்தியா தனது கார்களின் விலை 2 % வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் டைகன், டிகுவான் மற்றும் விர்டஸ் செடான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு ஆகியவை அதிகரித்து வருதனால் விலை உயர்வு கட்டாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கார்களின் விலை 3 % வரை அதிகரிக்கப்பட உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சவுண்ட் எடிசன் உள்பட ஜிடி எட்ஜ் டிரையல் டைகன் எடிசன் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. மேலும் வருடாந்திர முடிவை கொண்டாடும் வகையில் ரூ.4.20 லட்சம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது.