சிட்ரோன் இந்தியா தனது C3 , eC3 எலக்ட்ரிக், C3 ஏர்கிராஸ், மற்றும் C5 ஏர்கிராஸ் ஆகிய மாடல்களின் 2.5 % முதல் 3 % வரை விலை உயர்த்தப்பட உள்ளதை அறிவித்துள்ளது, விலை உயர்வு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வருகின்றது.
2024 ஜனவரி முதல் ஸ்டெல்லண்டிஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் ஜீப் மற்றும் சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக ஆதித்தியா ஜெயராஜ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
Citroen India Price hike
இந்தியாவின் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனங்களில் விலையை ஜனவரி 2024 முதல் அதிகரிக்க உள்ளதை அறிவித்துள்ள நிலையில் இந்த வரிசையில் சிட்ரோன் இந்தியாவும் இணைந்துள்ளது.
அனைத்து நிறுவனங்களும் பொதுவாக உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு ஆகியவை அதிகரித்து வருதனால் விலை உயர்வு கட்டாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்ரோன் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கார்களின் விலை 2.5 % முதல் 3 % வரை அதிகரிக்கப்பட உள்ளது.