எம்ஜி மோட்டார் நிறுவனம் வருட முடிவை கொண்டாடும் வகையில் தனது அனைத்து மாடல்களுக்கு சிறப்பு எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. எம்ஜி ஜனவரி 1 ஆம் தேதி முதல் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
230km ரேஞ்ச் வழங்குகின்ற எம்ஜி காமெட் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
MG December Fest
எம்ஜி நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யூவி குளோஸ்டெர் உட்பட ஆஸ்டர் மற்றும் ZS EV மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சலுகைகளை வழங்குகின்றது. அடுத்து மூன்று மாடல்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.50,000 என மொத்தமாக 1.50 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கின்றது. ஹெக்டர் வரிசை மாடல்களுக்கு ரூ50,000 சலுகை மற்றும் அடுத்து மூன்று மாடல்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.50,000 என மொத்தமாக ஒரு லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கின்றது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் 31-12-2023 வரை மட்டுமே வழங்கப்படும். டீலர்கள், வேரியண்ட் அடிப்படையில் மாறக்கூடும். மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள எம்ஜி மோட்டார் இந்தியா டீலரை அனுகலாம்.
மேலும் படிக்க – எம்ஜி மோட்டார் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி விபரம்