டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய அப்பாச்சி RTR 160 4V மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் விற்பனைக்கு ரூ.1.35 லட்சத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள டிரம் பிரேக் உள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல் ரூ.1.23 லட்சம் முதல் துவங்குகின்றது.
புதிய அப்பாச்சி மாடலில் லைட்டினிங் ப்ளூ என ஒற்றை நிறத்தை பெற்றதாக மட்டுமே வந்துள்ளது. மற்றபடி வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லை.
2024 TVS Apache RTR 160 4V
4 வால்வுகளை பெற்ற 159.7cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு என்ஜின் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் இடம்பெற்றுள்ளது. Sport மோட் 17.55hp பவரை 9250 rpm-லும், டார்க் 14.73 Nm ஆனது 7250 rpm அடுத்து, Urban/ Rain மோட் 15.64 hp பவரை 8600 rpm-ல், டார்க் 14.14 Nm ஆனது 7250 rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் பெற்று முன்பக்க டயரில் 90/90-17 கொடுக்கப்பட்டு 270 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130/70 R17 டயருடன் 240 மிமீ டிஸ்க் உள்ளது.
டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதியுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் விலை ரூ.1.23 லட்சம் முதல் ரூ.1.35 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Model | Ex-showroom Tamil Nadu Price |
Drum | Rs 1,23,870 |
Disc | Rs 1,27,370 |
Bluetooth Disc | Rs 1,30,670 |
Special Edition | Rs 1,32,170 |
Dual Channel ABS | Rs 1,34,990 |