தமிழ்நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய மிக்ஜாம் புயலுக்கு ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை சார்பாக ரூ. 3 கோடி நிவாரனத்தை அறிவித்துள்ளது. சென்னை பெருநகர் மற்றும் சுற்றுப்புற மாடவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு வகையில் நிவாரனப் பொருட்களை வழங்கி வருகின்றது.
ஹூண்டாய் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு, தண்ணீர், தங்குமிடம், மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அவசரகால நிவாரணங்களை வழங்க, நிறுவனத்தின் குழுக்கள் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
Hyundai Motor India
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. அன் சூ கிம் நிவாரனம் வழங்கியது குறித்து பேசுகையில், “சோதனைக் காலங்களில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்து நிற்கிறது. நமது உலகளாவிய பார்வையின் மூலம் மனிதகுலத்திற்கான முன்னேற்றம், இது போன்ற காலங்களில் சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தணிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நிவாரண நிதிக்கு ரூ. 3 கோடியை வழங்கியுள்ளோம். இந்த உதவி மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்க உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
உணவுப்பொருட்கள், தார்பாய், பெட்ஷீட்கள் மற்றும் பாய்கள் போன்ற நிவாரணப் பொருட்களை HMIF வழங்கி வருகின்றது. மருத்துவ முகாம்களும் ஏற்படுத்த உள்ளோம் என குறிப்பிட்டார்.
மிக்ஜாம் புயல் வெள்ளதால் பாதிப்படைந்த ஹூண்டாய் வாடிக்கையாளர்களுக்கு, அவசர சாலை உதவிக் குழுவை அமைத்திருப்பதுடன் மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வாகனங்களின் காப்பீட்டுக் கோரிக்கைகளில் தேய்மானத் தொகையில் 50% தள்ளுபடியை வழங்கும்.
மேலும், அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை வருகையை எதிர்கொள்ளள இந்நிறுவனத்தின் சேவை மையங்கள் உயர் நிலையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் அறிக்கையில் தெரிவித்துள்ளது.