இந்தியாவில் முதன்முறையாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் முதல் பேக்ஹோ லோடர் 3DX மாடலை ஜேசிபி இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தியாவில் கட்டுமானத் துறையில் கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை சாதிக்கும் வகையில் ஜேசிபி நிறுவனம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Hydrogen Powered JCB Back hoe loader
ஜேசிபியின் £100 மில்லியன் மதிப்பிலான ஹைட்ரஜன் என்ஜின்களை உற்பத்தி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பேக்ஹோ லோடர் முன்மாதிரி முதன்முறையாக பார்வைக்கு வந்துள்ளது.
ஹைட்ரஜன் என்ஜின் உருவாக்குவதற்கான முன்னோடி முயற்சியில் 150 ஜேசிபி பொறியாளர்கள் குழு செயல்பட்டு வருகிறது. மேலும் 75க்கும் மேற்பட்ட முன்மாதிரிகள் ஏற்கனவே ஜேசிபியின் இங்கிலாந்து இயந்திர ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஜேசிபி இந்தியா கட்டுமானத் துறையில் முன்னணியில் ஹைட்ரஜனால் இயங்கும் இயந்திரங்களின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்த ஜேசிபி தலைவர் லார்ட் பாம்ஃபோர்டின் தொலைநோக்குப் பார்வையால் இது சாத்தியமாகியுள்ளது.