இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2023 பண்டிகை காலத்தில் 4,03,003 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பீடுகையில் 31 % வளர்ச்சி அடைந்துள்ளது.
2023 நவம்பரில் 3,06,719 ஆக இருந்த மொத்த வாகன விற்பனையில் 2023 நவம்பரில் 4,03,003 ஆக எட்டிய அதன் மொத்த வாகன விற்பனையில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது.
Bajaj Auto Sales report November 2023
பஜாஜ் முந்தைய மாதத்தில் மொத்த உள்நாட்டு விற்பனை (இரு சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள்) 2022 நவம்பரில் 1,52,883 இருந்து 69 சதவீதம் அதிகரித்து 2,57,744 யூனிட்களாக உள்ளது.
2022 நவம்பரில் விற்பனை செய்யப்பட்ட 1,23,657 யூனிட்களை விட 77 சதவீதம் வளர்ச்சியுடன் 2,18,597 இரு சக்கர வாகனங்கள் உள்நாட்டு விற்பனை ஆகியுள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டு இதே மாதத்தில் வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பப்பட்ட 1,53,836 வாகனங்களில் இருந்து நவம்பர் 2023ல் ஏற்றுமதி 6 சதவீதம் சரிந்து 1,45,259 ஆக உள்ளது.
பஜாஜ் ஆட்டோ உள்நாட்டு வணிக வாகன விற்பனையில் 34 சதவீதம் உயர்ந்துள்ளது, இது 29,226ல் இருந்து நவம்பர் 2023ல் 39,147 அலகுகளாக உயர்ந்துள்ளது. மொத்த வணிக வாகன விற்பனை எண்ணிக்கை 53,955 ஆகும்.