இந்தியாவின் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நவம்பர் 2023 விற்பனை முடிவில் ஒட்டுமொத்தமாக 3,64,231 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 2,77,123 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில் இது 31 % வளர்ச்சியாகும்.
டிவிஎஸ் இரு சக்கர வாகன விற்பனை 34 சதவீதம் அதிகரித்து, 2022 நவம்பரில் 263,642 யூனிட்களாக இருந்தத எண்ணிக்கை 2023 நவம்பரில் 352,103 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.
TVS Motor sales report November 2023
உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை 50 சதவீதம் உயர்ந்து 2022 நவம்பரில் 191,730 யூனிட்களாக இருந்த எண்ணிக்கை 2023 நவம்பரில் 287,017 யூனிட்களாக உயர்ந்துள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் 2022 நவம்பரில் 10,056 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட ஐக்யூப், 2023 நவம்பரில் டிவிஎஸ் 16,872 எண்ணிக்கையில் மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
மூன்று சக்கர வாகன பிரிவில் இந்நிறுவனம் 2023 நவம்பரில் 12,128 எண்ணிக்கையில் மட்டும் விற்றுள்ளது. 2022 நவம்பரில் 13,481 யூனிட்கள் விற்கப்பட்ட நிலையில் ஒப்பீடும் பொழுது 10 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
தொடர்ந்து டிவிஎஸ் ஐக்யூப் மின்சார பேட்டரி ஸ்கூட்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது.