சமீபத்தில் வெளியான ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிசனை தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 சந்தைக்கான மாடல் ஜனவரி மாத துவக்க வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறிப்பட்ட 25 எண்ணிக்கையில் மோட்டோவெர்ஸ் அரங்கில் பங்கேற்ற வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தயாரிக்கப்பட்ட மாடல் ரூ.4.25 லட்சத்தில் ஷாட்கன் 650 பிரத்தியேக நிறத்தை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டது.
Royal Enfield ShotGun 650
ஹிமாலயன் 450 அட்வென்ச்சரை தொடர்ந்து புதிய ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு ரூ.3.25 முதல் ரூ.3.50 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக விற்பனையில் உள்ள சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை விட குறைவான விலையில் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.
650சிசி என்ஜின் பெற்ற இன்டர்செப்டார், கான்டினென்டினல் ஜிடி 650 ஆகியற்றுடன் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் உள்ள அதே 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், 4000 RPM சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
சூப்பர் மீட்டியோர் 650 மாடலில் இருந்து வித்தியாசப்படுத்தும் வகையில் குறைந்த வீல்பேஸ் நீளம், முன்புறத்தில் 18 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றிருக்கின்றது. ஸ்போர்ட்டிவான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலான வடிவம், மேல்நோக்கிய கைப்பிடி, உயரமான இருக்கை மற்றும் நடுவில் அமைக்கப்பட்ட ஃபுட்பெக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மற்ற மெக்கானிக்கல் அம்சங்கள் சூப்பர் மீட்டியோரில் உள்ளதை போன்றே முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக் உடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் மூலம் கையாளப்படுகின்றது. யூஎஸ்டி முன் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் டிரிப்பர் நேவிகேஷன் உடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொண்டிருக்கின்றது.
ஸ்பெஷல் எடிசன் கைகளால் பெயிண்ட் செய்யப்பட்ட நிறம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்ட கஸ்டம் எடிசன் ஆன ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் பதிப்பு விலை ரூ.4.25 லட்சமாக இருந்தது. மேலும் அந்த நிறம் திரும்ப இனி தயாரிக்கப்படாது என ராயல் என்ஃபீல்டு உற்படுத்தியுள்ளது.
ஆனால் பொதுவான சந்தைக்கு வரக்கூடிய ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 விலை ரூ.3.25 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.