இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ முதல் இன்விக்டோ வரை உள்ள கார்கள் மற்றும் எஸ்யூவி விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால் எத்தனை சதவிகிதம் வரை விலை உயர்த்தப்படும் என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை.
Maruti Suzuki Hike Cars price
நாட்டின் முன்னணி தயாரிப்பளரான மாருதி ஆல்டோ ரூ.3.54 லட்சம் முதல் ரூ.28.52 லட்சம் வரையிலான விலையில் இன்விக்டோ எம்பிவி காரை அரினா மற்றும் நெக்ஸா என இரண்டு பிரிவு டீலர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றது.
அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வை ஈடுகட்டும் நோக்கில் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் எத்தனை சதவிகிதம் உயர்த்தப்படும் என தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை.
சமீபத்தில் ஆடி கார் நிறுவனம் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில், தொடர்ந்து மாருதி உட்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஜனவரி 2024 முதல் விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிடலாம்.