மோட்டோவெர்ஸ் 2023 அரங்கில் கஸ்டமைஸ்டு ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக் விற்பனைக்கு ரூ. 4.25 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக நேர்த்தியாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள ஷாட்கன் பைக்கில் 25 எண்ணிக்கையில் மட்டும் முதற்கட்டமாக கிடைக்க உள்ளது.
எற்கனவே விற்பனையில் உள்ள 650சிசி என்ஜின் பெற்ற இன்டர்செப்டார், கான்டினென்டினல் ஜிடி 650 ஆகியற்றுடன் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் உள்ள அதே என்ஜினை ஷாட்கன் பெற்றுள்ளது.
Royal Enfield ShotGun 650
பாபர் ஸ்டைலை பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கில் 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 Hp குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 RPM சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஷாட்கன் 650 பைக்கிற்கு பவர் மற்றும் டார்க்கில் மாற்றம் இருக்குமா என்று உறுதியான தகவல் இல்லை.
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பைக்கில், அதிக ஸ்போர்ட்டிவான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், ஒரு தட்டையான கைப்பிடி, உயரமான இருக்கை மற்றும் நடுவில் அமைக்கப்பட்ட ஃபுட்பெக்குகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது.
கைகளால் தயாரிக்கப்பட்ட முதல் 25 யூனிட்டுகளில் ஒன்று மோட்டோவெர்ஸ் அரங்கில் காட்சிக்கு வந்துள்ளது. விற்பனைக்கு அனேகமாக அடுத்த ஆண்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முதலில் தயாரிக்கப்பட்ட 25 யூனிட்டுகள் விற்பனைக்கு முன்பதிவு ராயல் என்ஃபீல்டு இணையதளத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.
25 வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாடிக்கையாளர்கள் மோட்டோவெர்ஸ் 2023 அரங்கில் பங்கேற்றவர்கள் மட்டுமே நவம்பர் 25 ஆம் தேதி நள்ளிரவு வரை 25 யூனிட்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
இந்த வண்ணம் மீண்டும் உருவாக்கப்படாது என உறுதியாக ராயல் என்ஃபீல்டு தலைவர் தெரிவித்துள்ள நிலையில் ஜனவரி 2024 முதல் டெலிவரி துவங்கப்பட உள்ளது.