ஏதெர் எனர்ஜி நிறுவனம் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற வழக்கமான ஸ்கூட்டர் வடிவமைப்பினை கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபத்தி வரும் படங்கள் வெளியாகியுள்ளது.
புதிய ஸ்கூட்டர் மாடல் விற்பனையில் உள்ள டிவிஎஸ் ஐக்யூப் , ஓலா எஸ்1 புரோ உள்ளிட்ட மாடல்களுடன் ஏதெரின் 450 மாடல்களை யும் எதிர்கொள்ளலாம்.
Upcoming Ather escooter
தற்பொழுது சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்படும் மாடல் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஏதெர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் மோட்டார் உள்ளிட்ட பல்வேறு பாகங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.
சோதனை ஓட்டத்தில் உள்ள மாடல் 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும். 3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 150 கிமீ தொலைவு பயணிக்கலாம் அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.
450S ஸ்கூட்டரில் உள்ளதை போலவே டீப் வியூ டிஸ்ப்ளேவை பெற உள்ள இந்த மாடலில் எல்இடி விளக்குகளுடன், ஸ்கூட்டரில் ரைடிங் முறைகள், பல்வேறு அறிவிப்புகளுடன் ஸ்மார்ட்போன் இணைப்பு ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் புதிய ஏதெர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கலாம்.