நடப்பு 2023 ஆம் ஆண்டின் பண்டிகை காலத்தில் நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான 32 நாட்களில் ஹீரோ மோட்டோகார்ப் அதிகபட்சமாக 14 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
முந்தைய ஆண்டின் பண்டிகை காலத்தை ஒப்பீடுகையில் 19 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக ஹீரோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Hero Motocorp
இரண்டாவது ஆண்டாக ஹீரோ மோட்டோகார்ப் செயல்படுத்த துவங்கிய GIFT பண்டிகை கால கொண்டாட்டத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகள், குறைந்த இ.எம்.ஐ திட்டங்களை செயல்படுத்தியது. அதன் பயனாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
விற்பனை எண்ணிக்கை குறித்து பேசிய ஹீரோ தலைமைச் செயல் அதிகாரி (CEO) நிரஞ்சன் குப்தா, “நாங்கள் பண்டிகை விற்பனையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் மற்றும் பிராண்ட் ஹீரோவின் மீது நம்பிக்கையையும் தொடர்ந்து நிலைநிறுத்தி வரும் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி.
எங்கள் வலுவான பிராண்டுகளின் போர்ட்ஃபோலியோ, விநியோகம் மற்றும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடல்கள் ஆகியவை மூலம் இந்த வளர்ச்சி சாத்தியமானது. கிராமப்புறங்கள் மீண்டும் வளர்ச்சி அடைய துவங்கியது என்பதற்கு பண்டிகைக் காலம் ஒரு தெளிவான சாட்சியாகும். இது பொதுவாக நாட்டிற்கும் குறிப்பாக இரு சக்கர வாகனத் தொழிலுக்கும் நல்லதாகும் என தெரிவித்துள்ளார்.
ஹீரோ இந்திய வணிகப் பிரிவின் தலைமை வணிக அதிகாரி ரஞ்சிவ்ஜித் சிங் கூறுகையில் “நாட்டில் மிகவும் விரும்பப்படும் மற்றும் மிகவும் நம்பகமான பிராண்டாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததைக் கொண்டு வருவதில் ஹீரோ பெருமை கொள்கிறது, மேலும் நாங்கள் அந்த உறுதிப்பாட்டிற்கு இணங்கி செயல்பட்டு வருகிறோம். மத்திய, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நல்ல இரட்டை இலக்க வளர்ச்சி பெற்றுள்ளது.
மற்ற நிறுவனங்களான டிவிஎஸ், பஜாஜ், ஹோண்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் சிறப்பான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்திருக்கும் எனவே சுமார் 30 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படிருக்கலாம்.
மேலும் படிக்க – EICMA 2023ல் ஹீரோ ஜூம் 160 அட்வென்ச்சர் அறிமுகம்