மணிக்கு 265 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்ற அல்ட்ராவைலட் F99 ரேசிங் பிளாட்ஃபாரத்தை EICMA 2023 மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சர்வதேச சந்தைக்கு செல்ல உள்ள அல்ட்ராவைலட் F77 எலக்ட்ரிக் பைக் மாடலும் அறிமுகமானது.
ஏக்டிவ் ஏரோடைனமிக்ஸ் மூலம் மிக சிறப்பான வகையில் காற்றினால் ஏற்படும் வேக இழப்பை கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பேனல்கள் வடிவமைப்பினை கொண்டுள்ளது.
Ultraviolette F99 Racing Platform
மிக தீவிர காற்றியக்கவியலில் கவனம் செலுத்தும் அல்ட்ராவயலட் எஃப்99 பைக்கின் முன்புறத்திலும் ஒரு பெரிய வென்ட் மற்றும் பைக் முழுவதும் பல்வேறு இடங்களில் விங்லெட்ஸ் உள்ளன, இதனால் சிறப்பான வேகத்தை பெறுகின்றது.
F99 எலக்ட்ரிக் பைக்கில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 90kW (120hp) பவர் உருவாக்குகிறது 178kg எடை கொண்டுள்ள பைக் 3 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தில் எட்டும் திறனுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 265 கிமீ ஆகும். பேட்டரி காற்று மூலம் குளிரூட்டப்பட்டாலும், அதே நேரத்தில் மோட்டார் மற்றும் கண்ட்ரோலர் இரண்டும் திரவம் மூலம் குளிரூட்டப்படுகின்றது.
உலகளவில் அல்ட்ராவைலட் F99 விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று இந்நிறுவனம் கூறுகிறது.
Ultraviolette F77
இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள அல்ட்ராவைலட் F77 பைக்கின் அடிப்படையிலே சர்வதேச சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றது. 10.3kWh பேட்டரி பேக் கொண்டு 307km IDC-உரிமைகோரப்பட்ட வரம்பு புள்ளிவிவரங்கள் F77 இன் டாப்-ஸ்பெக் ரீகான் வேரியண்ட்டை போலவே உள்ளது. F77 ஸ்பேஸ் எடிஷன் 30.2kW (40.5hp) மற்றும் 100Nm டார்க்கை வழங்கும்.