டெல்லி பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாகனங்களின் மாசு உமிழ்வுக்கு பிரச்சனைக்கு தீர்வு காண GRAP (Graded Response Action Plan) 3வது படிநிலை மூலம் 2023 நவம்பர் 2 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பிஎஸ்3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்4 டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்து டெல்லி போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
Delhi Pollution
அதிகாரிகளின் கூற்றுப்படி, டெல்லி பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசு நெருக்கட்டிக்கு எதிராக போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) ‘மோசமான நிலையை’ அளவீட்டை எட்டியுள்ளதால், GRAP மூன்றாம் கட்டத்தை அமல்படுத்துவதற்கு முடிவெடுத்துள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்கள், மோட்டார் வாகனச் சட்டம், 1988, பிரிவு 194(1) கீழ் வழக்குத் தொடருதல் உட்பட சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்தப் பிரிவு மூலம் ரூபாய் 20,000 அபராதம் விதிக்கிறது.
குறிப்பிட்ட வகை வாகனங்களுக்கு விதிவிலக்குகள் அவை அவசர சேவைகள், காவல்துறை வாகனங்கள் மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கான அரசு வாகனங்கள் ஆகியவை இந்த கட்டுப்பாடுக்கு உட்பட்டவை அல்ல.