அட்வென்ச்சர் டூரிங் ரக பிரிவில் உள்ள கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் புதிய நிறத்துடன் தொடர்ந்து 373cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
புதிதாக வந்த கேடிஎம் 390 டியூக் பைக்கில் புதிய LC4 399cc என்ஜின் கொண்டதாக உள்ள நிலையில், அட்வென்ச்சர் ரக மாடல் முந்தைய என்ஜினில் மட்டுமே வந்துள்ளது.
2024 KTM 390 Adventure
2024 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடல் சிறந்த பவர் டூ எடை விகிதம், நவீன தொழில்நுட்பம் பெற்று சிறப்பான ஆஃப் ரோடு சாகசத்துக்கு ஏற்ற வகையில் முன்பக்கத்தில் 19” அங்குலம் மற்றும் 17” அங்குல வீல் கொண்டுள்ளது.
கேடிஎம் 390 அட்வென்ச்சரில் 373.2cc லிக்யூடு-கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டு 43.5 hp குதிரைத்திறன் மற்றும் 37 Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது.
KTM 390 Adventure Engine Specs | |
Engine Displacement (CC) | 373.2 cc Fi, Single Cylinder Liquid cooled |
Power | 43 bhp |
Torque | 37 Nm |
Gear Box | 6 Speed |
மற்றபடி, ஆஃப் ரோடு சாகத்துக்கு ஏற்ற ஃபூட் பெக், சிறப்பான ரைடிங் தன்மை கொண்ட இருக்கை மற்றும் புதிய விண்ட்ஷீல்டு கொண்டுள்ளது. 14.5 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட பைக்கில் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 280 மிமீ டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக அமைந்துள்ளது. கூடுதலாக கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் கொண்டுள்ளது.
2024 KTM 390 அட்வென்ச்சர் இரண்டு புதிய வண்ணத்தை கொண்டுள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் பாரம்பரிய ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறம், புதிய சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தை கொண்டுள்ளது.
புதிய 2024 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் STD, அட்வென்ச்சர் X மற்றும் 390 அட்வென்ச்சர் SW ஆகிய மாடல்களும் விற்பனை செய்யப்பட உள்ளது. அடுத்த சில வாரங்களில் புதிய மாடல் விலை அறிவிக்கப்பட உள்ளது.