ரெட்ரோ ஸ்டைலை பெற்ற ரோனின் 225 பைக்கில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்பெஷல் எடிசன் மாடலை ரூ.1.73 லட்சம் விலையில் டிவிஎஸ் மோட்டார் அறிமுகம் செய்துள்ளது.
ரோனின் TD பைக்கில் 225.9 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 20.1 HP பவர் மற்றும் 19.93 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
TVS Ronin 225 Special Edition
புதிய டிரிபிள்-டோன் நிம்பஸ் கிரே கலர் ஆப்ஷனை பெறும் ரோனின் 225 பைக்கில் புதிய கிராஃபிக்ஸ் கொண்டுள்ளது. மற்றபடி, கிரே நிறத்துக்கு அதிக முக்கியத்துவமும் அடுத்து வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களும் உள்ளது.
ரோனின் பிராண்டிங் பெற்ற ரிம், பல்வேறு இடங்களில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. USB சார்ஜர், வைசர் மற்றும் ஃஎப்ஐ கவர் சேர்க்கப்பட்டுள்ளது.
17 அங்குல வீல் வழங்கப்பட்டு முன்புறத்தில் கோல்டன் நிறத்திலான யூஎஸ்டி போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. ரோனின் மாடலில் உள்ள ஏபிஎஸ் உடன் அர்பன் மற்றும் ரெயின் என இரண்டு மோட் கொடுக்கப்பட்டுள்ளது.
TVS Ronin price list
Single Tone: Rs 1,49,200
Dual Tone: Rs 1,56,700
Triple Tone: Rs 1,68,950
Ronin 225 TD – Rs.1,72,700