பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 6-12 மாதங்களில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பிளாட்டினா பைக் மாடலை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், டூ வீலர் தவிர மூன்று சக்கர வாகனம் உட்பட குவாட்ரிசைக்கிள் ஆகியவற்றை திரவ பெட்ரோலிய வாயு (எல்பிஜி), எத்தனால் கலந்த எரிபொருள் விருப்பங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
முதலில் வரவுள்ள சிஎன்ஜி எரிபொருளுடன் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ள (Bruzer of E101) அதிக மைலேஜ் தரும் பிளாட்டினா 110சிசி சிஎன்ஜி பைக்கின் முன்மாதிரி சோதனை முயற்சியில் தயாரிக்கப்பட்டுள்ள பைக் ஆரம்ப கட்ட பரிசோதனையில் உள்ளதால் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.
Bajaj Platina CNG
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் எக்ஸ்கூட்டிவ் டைரகட்ர் ஆட்டோகார் புரொபஷனல் இதழுக்கு அளித்த பேட்டியில் கடந்த சில ஆண்டுகளாக பஜாஜ் ஆட்டோ எண்ணைய் இறக்குமதி குறைக்கவும், மாசுபாட்டை குறைப்பது போன்ற இரட்டை சவால்களை நாடு எதிர்கொண்டுள்ளது எனபதனை அறிந்து அதற்கு ஏற்ற செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
3 சக்கர வாகனங்களில் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி எரிபொருளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைப்பதில் பஜாஜ் எப்படி முன்னோடியாக இருந்தது என்பதை அவர் நினைவுபடுத்தினார், மேலும் இன்று பயணிகள் மூன்று சக்கர வாகனப் பிரிவில் அதன் தொழில்நுட்பத் திறன்கள், ஆரம்பகால நகர்வுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடனான ஒத்துழைப்பின் காரணமாக நிறுவனம் 90% பங்கினை பஜாஜ் கொண்டுள்ளது.
EV, எத்தனால், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி ஆகிய முறையில் எங்கள் போர்ட்ஃபோலியோவில் “மாசு உமிழ்வு இல்லாத எரிபொருள்” பங்களிப்பினை நிச்சயமாக விரிவுபடுத்த விரும்புகிறோம். இரண்டு சக்கரம் மற்றும் மூன்று சக்கரம் என இரண்டிலும் இதனை நாங்கள் உறுதியாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஆரம்ப உற்பத்தித் திட்டம் ஆண்டுக்கு சுமார் 1-1.2 லட்சம் சிஎன்ஜி பைக்குகளை உற்பத்தி செய்வதாக இருந்த நிலையில், தற்பொழுது சுமார் 2 லட்சம் யூனிட்டுகளாக உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. முதல் சிஎன்ஜி பைக் மிக சிறப்பான மைலேஜ் தரும் மாடலாக வரவுள்ளது.