ரத்தன் இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளரின் RV400 அடிப்படையில் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறுவதனை தொடர்ந்து கிரிக்கெட் ஸ்பெஷல் எடிசன் மாடல் ரூ.1.55 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் ப்ளூ நிறத்தை மட்டும் பெறுகின்ற RV400 பைக்கின் வசதிகள் மற்றும் நுட்பத்தில் எந்த மாற்றங்களும் இல்லை. சமீபத்தில் ஆர்வி400 ஸ்டெல்த் எடிசன் என்ற கருப்பு நிற ஸ்பெஷல் எடிசனை வெளியிட்டிருந்தது.
Revolt RV400 Cricket Edition
3.24 kWh பேட்டரி பேக்கை 3 kW மிட்-டிரைவ் மோட்டார் மூலம் இயக்கப்படும் ஆர்வி400 மோட்டார்சைக்கிள் முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். முழு சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை செல்லும் என்று ரிவோல்ட் கூறுகிறது. அதிகபட்ச வேக மணிக்கு 85 கிமீ ஆகும்.
இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, சிறப்பான கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ள இந்த மாடல் சிறப்பான ஸ்போர்ட்டிவ் நேக்டு ஸ்டீரிட் பைக் தோற்ற அமைப்பினை வெளிப்படுத்துகின்றது.
ரிவோல்ட் RV400 எலக்ட்ரிக் பைக்கின் கிரிக்கெட் எடிசன் விலை ரூ.1.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)