ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், புதிதாக இ-கிளட்ச் நுட்பம் மூலம் கிளட்ச் லீவர் பயன்படுத்தாமல் மின்னணு முறையில் இயக்கப்படுகிறது. எதிர்காலத்தில் வரவிருக்கும் பைக்குகளில் புதிய நுட்பத்தை கொண்டதாக வெளியாக உள்ளது.
சந்தையில் ஏற்கனவே டிசிடி கியர்பாக்ஸ் நுட்பத்தை ஹோண்டா கொண்டுள்ள நிலையில், எம்வி அகுஸ்டா மற்றும் ஹார்லி பைக்குகளின் பிரீமியம் மாடல்களில் ரெக்லூஸ் ஸ்மார்ட் கிளட்ச் எனப்படும் ஆட்டோ கியர்பாக்ஸ் முறை உள்ளது.
Honda E-Clutch System
உலகின் முதல் இ-கிளட்ச் தொழில்நுட்பத்தை கொண்ட முதன்முறையாக அறிமுக செய்த நிறுவனம் என ஹோண்டா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இ கிளட்ச் மூலம் மின்னணு முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தி கிளட்ச் செயல்பாட்டை வழங்குகிறது. பைக்கை ஓட்டும்போது சாதாரணமாக இயக்கக்கூடிய கிளட்ச் லீவர் இருக்கும், ஆனால் லிவர் உதவியில்லாமலே கியர் அப் அல்லது டவுன் ஷிஃப்ட் செய்யலாம்.
மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளிலும் இலகுவாக கியர் ஷிஃப்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய நுட்பம் ஏற்கனவே உள்ள என்ஜின்களிலும் பயன்படுத்தலாம் என ஹோண்டா குறிப்பிட்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது பைக்குகளில் இ-கிளட்ச் நுட்பத்தை கொண்டு வரவுள்ளது.