டிரையம்ப் நிறுவனத்தின் ஸ்பீடு 400 பைக்கை தொடர்ந்து ஸ்கிராம்பளர் 400 X விற்பனைக்கு ரூ.2.63 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 400சிசி லிக்யூடூ கூல்டு என்ஜினை பகிர்ந்து கொள்ளும் மாடல் மிக சவாலாக விளங்குகின்றது.
ஸ்பீட் 400 அறிமுகம் முதலே முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முன்பதிவு செய்ய விரும்பினால் ரூ.10,000 கட்டணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
Triumph Scrambler 400 X
ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 X என இரு பைக்கிலும் பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரைம்யம்ப் கூட்டணியின் புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஆஃப் ரோடு மற்றும் ஆன்-ரோடு பயன்பாடுகளுக்கு ஏற்ற டயர் வழங்கப்பட்டுள்ள ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பு, பிரேக்கிங் இரு மாடல்களுக்கும் வித்தியாசப்படுகின்றது.
ஸ்க்ராம்ப்ளர் 400 X பைக்கில் ஃப்யூஷன் ஒயிட் நிறத்துடன் மேட் காக்கி கிரீன், கார்னிவல் ரெட் உடன் பாண்டம் பிளாக் மற்றும் பாண்டம் பிளாக் வித் சில்வர் ஐஸ் என மூன்று வண்ணத்தில் கிடைக்கின்றது.