ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 X பைக்கில் புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஆஃப் ரோடு மற்றும் ஆன்-ரோடு பயன்பாடுகளுக்கு ஏற்ற டயர் வழங்கப்பட்டுள்ள ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பு, பிரேக்கிங் இரு மாடல்களுக்கும் வித்தியாசப்படுகின்றது.
ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 X பைக்கில் ஃப்யூஷன் ஒயிட் நிறத்துடன் மேட் காக்கி கிரீன், கார்னிவல் ரெட் உடன் பாண்டம் பிளாக் மற்றும் பாண்டம் பிளாக் வித் சில்வர் ஐஸ் என மூன்று வண்ணத்தில் கிடைக்கின்றது.
மேலும் படிங்க – ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் வித்தியாசங்கள்
ஸ்பீடு 400 அறிமுகம் முதலே முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், விலை அடுத்த சில நாட்களுக்குள் அறிவிக்கப்பட்ட உடன் டெலிவரி துவங்கப்பட உள்ளது.