டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2023 ஆம் ஆண்டிற்கான புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி என இரு மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பதிவை துவங்கியுள்ளதால் விரைவில் அடுத்த சில நாட்களுக்குள் விலை அறிவிக்கப்பட உள்ளது.
சமீபத்தில் நெக்ஸான் மற்றும் நெக்ஸான்.இவி என இரண்டும் விற்பனைக்கு வெளியானதை தொடர்ந்து இரண்டு மாடல்களும் அறிமுகம் செய்ய உள்ளது.
Tata Harrier Facelift
டாடா ஹாரியர் எஸ்யூவி புதுப்பிக்கப்பட்ட முன்புற கிரில், பம்பர் இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் கொண்டதாக அமைந்திருக்கலாம். மிக நேர்த்தியான எல்இடி பார் லைட் பானெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும். பக்கவாட்டில் மிகப் பெரிய மாற்றங்கள் இல்லாமல், புதிய அலாய் வீல் பெற்றிருக்க கூடும். பின்புறத்தில் புதுபிக்கப்பட்ட பம்பர் , புதிய எல்இடி டெயில் லைட் கொண்டிருக்கும்.
இன்டிரியரில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டாப் வேரியண்டுகளில் 12.3 அங்குல டிஸ்பிளே கொடுக்கப்பட்டு பல்வேறு டெக் சார்ந்த கனெக்ட்டிவ் அம்சங்களை பெற்றிருக்கலாம். டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று பல்வேறு மாற்றங்கள் கொண்டதாக இருக்கலாம்.
Tata Safari Facelift
7 இருக்கை பெற்ற சஃபாரி எஸ்யூவி மாடலில் புதுப்பிக்கப்பட்ட முன்புற கிரில், பம்பர் இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் கொண்டிருக்கலாம். மிக நேர்த்தியான எல்இடி பார் லைட் பானெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும்.
சஃபாரியின் பின்புறத்தில் எல்இடி பட்டை உடன் இணைக்கப்பட்ட ஸ்லீக்கர் டெயில் லைட் மற்றும் சில்வர் இன்செர்ட் உடன் கூடிய புதிய டூயல்-டோன் பம்பர் கொண்டிருக்கும்.
பொதுவாக, இரண்டு மாடல்களிலும் 170 hp பவர் மற்றும் 350Nm டார்க் வழங்கும் 2.0-லிட்டர் டீசல் என்ஜினுடன் ஆறு-வேக மேனுவல் அல்லது ஆறு-வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
2023 ஹாரியர் மற்றும் சஃபாரி என இரு எஸ்யூவி மாடலுமு ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் அல்கசார், கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர், எம்ஜி ஹெக்டர் பிளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி700 போன்ற எஸ்யூவிகளுடன் சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது.