ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் பட்ஜெட் விலை மோடார்சைக்கிள் மாடலான X440 பைக்கிற்கான முன்பதிவு மீண்டும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. மேலும், முன்பாக பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் டெலிவரி துவங்கப்பட உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் உருவான முதல் தயாரிப்பு மாடலான எக்ஸ்440 அமோக வரவேற்பினை இந்திய சந்தையில் பெற்று 25,597 பதிவுகளை பெற்றிருந்த நிலையில் முன்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. டாப்-ஸ்பெக் ‘S’ வேரியண்ட் எண்ணிக்கையில் 65 % பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Harley-Davidson X440 Bookings Reopen
ஹார்லி 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெறுகிறது. இதில் ப்ரீ-லோடு அட்ஜெட்மென்ட் கொண்டதாக உள்ளது.
முன்புறத்தில் 18 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றுள்ளது. 320 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240 mm டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது. X440 பைக்கின் மைலேஜ் 35km/l என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 தோராயமான தமிழ்நாடு ஆன்-ரோடு விலை
- X440 Denim ₹. 2,73,656 லட்சம்
- X440 Vivid ₹. 307,540 லட்சம்
- X440 S ₹. 3,37,645 லட்சம்