டூகாட்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஸ்கிராம்பளர் 2G பைக்கில் ஐகான், ஃபுல் திராட்டிள் மற்றும் நைட்ஷிஃப்ட் என மூன்று விதமாக இந்தியாவில் ரூ.10.39 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கிடைக்க உள்ளது.
முந்தைய மாடலை விட சில குறிப்பிடதக்க மேம்பாடுகளை பெற்ற மாடலை விட மாறுபட்ட புதிய ஃபிரேம், ஸ்விங்கார்ம் மற்றும் என்ஜினின் எடையைக் குறைந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளை ஒட்டுமொத்தமாக 4 கிலோ கிராம் எடை குறைந்துள்ளது.
Ducati Scrambler 2G
புதிய தலைமுறை டூகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் மூன்று வேரியண்டிலும் 803cc எல் ட்வின் சிலிண்டர், ஆயில் மற்றும் ஏர்-கூல்டு டெஸ்மோட்யூ என்ஜினை கொண்டுள்ளது. 8.250 rpm-ல் 73 bhp பவர், 7,000 rpm-ல் 65Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஸ்க்ராம்ப்ளர் ஐகானில் க்விக் ஷிஃப்டர் இப்போது ஒரு விருப்பமாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், நைட்ஷிஃப்ட் மற்றும் ஃபுல் த்ரோட்டில் வகைகளில் க்விக் ஷிஃப்டரை பெறுகின்றன.
185 கிலோ எடை கொண்டுள்ள பைக்கின் முன்புறத்தில் கியாபாவிலிருந்து 41 மிமீ முன்புற ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் புதிய ஸ்விங்கார்முடன் கியாபா மோனோஷாக் பெற்றதாக அமைந்துள்ளது. புதிய இரண்டாம் தலைமுறை ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் இரண்டு ரைடிங் மோடுகளை வழங்குகிறது. ஸ்ட்ரீட் மற்றும் வெட் பெற்றுள்ளது.
புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளரில் உள்ள டிஸ்ப்ளே 4.3-இன்ச் கலர் TFT யூனிட் பெற்று புளூடூத்-வாயிலாக மொபைலை இணைக்க அனுமதிக்கிறது.
ரெட்ரோ ஸ்டைலிங் அமைப்பினை கொண்ட ஸ்கிராம்பளர் ஐகான் மாடல் உள்ளது. அடுத்தப்படியாக, அமெரிக்கன் ஃபிளாட் டிராக் ரேசர் வடிவமைப்பினை சார்ந்ததாக ஃபுல் திராட்டிள் வேரியண்ட் உள்ளது. இறுதியாக, கஃபே ரேசர் வடிவமைப்பினை பெற்றதாக நைட்ஷிஃப்ட் உள்ளது.