புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2024 கேடிஎம் 390 டியூக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் முக்கிய சிறப்புகள், தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
முந்தைய மாடலை விட மேம்பட்ட வசதிகள் கொண்டதாகவும், நவீனத்துவமான டிசைன் அம்சங்களை பெற்று என்ஜின் சிசி உயர்த்தப்பட்டு பவர் அதிகரிக்கப்பட்டுள்ளது. 13,000 வரை விலை உயர்ந்துள்ளது.
2024 KTM 390 Duke
390 டியூக் பைக்கில் அதிகபட்சமாக 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் பெறுகின்றது. கூடுதலாக, ஸ்லிப்ப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உடன் க்விக் ஷிஃப்டர் பெறுகின்றது.
புதிய 390 டியூக்கின் செயல்திறன் ரைடிங் மேம்பாடுகள், முன்பை விட மேம்படுத்தப்பட்டதாக உள்ளது. பின்னர், பைக் இரு பக்க டயர்களிலும் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷனை பெறுகிறது, இது ரைடர்களுக்கு ஏற்ற அதிக வசதி மற்றும் சரிசெய்யக்கூடிய தன்மையை வழங்குகிறது.
டியூக் 390 மாடலின் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பில் அகலமான எல்இடி ஹெட்லைட்டை பெற்று பெட்ரோல் டேங்க் எக்ஸ்டென்ஷன் முன்பை விட பெரியதாக அமைந்துள்ளது. புதிய பின்புற சப்ஃப்ரேமைப் பயன்படுத்துகிறது. பெரிய 320 மிமீ முன்புற டிஸ்க் மற்றும் பின்புற 240 மிமீ டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெறுகின்றது.
KTM 390 டியூக் முழுமையான 5 அங்குல டிஜிட்டல் கன்சோல், லான்ச் கன்ட்ரோல் மற்றும் ரைடிங் முறைகள் (ஸ்டீரிட், ரெயின் மற்றும் ட்ராக்) ஆகியவற்றைப் பெறுகிறது. ஸ்மார்ட்போன் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் அழைப்பு மற்றும் இசை கட்டுப்பாடு போன்ற பிற அம்சங்களும் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டில் கேடிஎம் 390 டியூக் பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 3,61,010
(All price on-road in Tamil Nadu)
மேலும் படிக்க – கேடிஎம் 390 டியூக் பைக்கின் போட்டியாளர்கள்