டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் 2023 ஆம் ஆண்டு நெக்ஸான் எஸ்யூவி மாடல் விலை ரூ. 8.10 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போட்டியாளர்களை விட மிக சிறப்பான வசதிகளை கொண்டதாகவும், நவீனத்துவமான டிசைன் பெற்றுள்ளது.
நெக்ஸான் எஸ்யூவி போட்டியாளர்கள் மாருதி பிரெஸ்ஸா மஹிந்திரா எக்ஸ்யூவி 300, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், ரெனோ கிகர், நிசான் மேக்னைட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
2023 Tata Nexon SUV
புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் காரில் மிக நேர்த்தியான ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப், ரன்னிங் விளக்குகள், பம்பரின் கீழ் பகுதியில் அகலமான கிரில் கொண்டதாக அமைந்துள்ளது. பக்கவாட்டில் புதிய 16 அங்குல அலாய் வீல், பின்புறத்தில் முழுமையான எல்இடி பார் லைட், எல்இடி டெயில் விளக்குகளை பெற்று மிக நேர்த்தியான பம்பர் அமைப்பினை கொண்டதாக அமைந்துள்ளது.
புதிய நெக்ஸான் எஸ்யூவி காரில் அதிகபட்சமாக 120hp பவரையும், 170Nm டார்க் வழங்கும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்பொழுது 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு AMT மற்றும் 7- வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் (க்விக் ஷிஃப்டர்) என 4 கியர்பாக்ஸ்களில் கிடைக்கிறது.
அடுத்தப்படியாக, 115hp பவர் மற்றும் 160Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆனது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் வழங்கப்பட்டுள்ளது.
நெக்ஸான் காரின் இன்டிரியரில் இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீல் மத்தியில் ஒளிரும் வகையிலான டாடா லோகோ, ஃப்ரீ-ஸ்டாண்டிங் முறையில் 10.25-இன்ச் தொடுதிரை அம்சம், 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டரும் பெற்றுள்ளது. மேலும், வயர்லெஸ் சார்ஜர், காற்றோட்டமான முன் இருக்கைகள், காற்று சுத்திகரிப்பு போன்ற வசதிகளும் உள்ளன.
இந்த காரில் இடம்பெற்றுள்ள வேரியண்ட் Smart, Smart+, Smart+ (S), Pure+, Pure+ (S), Creative, Creative+, Creative+ (S), Fearless, Fearless (S) மற்றும் Fearless+ (S) ஆகியவை கிடைக்கின்றது.
அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில், ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பின் இருக்கை பயணிகளுக்கான மூன்று புள்ளி சீட் பெல்ட் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை வசதி, 360 டிகிரி கேமராக்கள், முன்புற பார்க்கிங் சென்சார் மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டர் ஆகியவை உள்ளது.
கடந்த செப்டம்பர் 4, 2023 முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகின்றது.
2023 Tata Nexon SUV price list
அறிமுக சலுகை ரூ.8.10 லட்சத்தில் துவங்குகின்ற Nexon facelift (all prices, ex-showroom)
Variant | Price |
Nexon facelift Smart Petrol MT | Rs 8.10 lakh |
Nexon facelift Smart+ Petrol MT | Rs 9.10 lakh |
Nexon facelift Pure Petrol MT | Rs 9.70 lakh |
Nexon facelift Creative Petrol MT | Rs 11 lakh |
Nexon facelift Creative+ Petrol MT | Rs 11.70 lakh |
Nexon facelift Fearless Petrol MT | Rs 12.50 lakh |
Nexon facelift Fearless+ Petrol MT | Rs 13 lakh |
Nexon facelift Creative Petrol AMT | Rs 11.70 lakh |
Nexon facelift Creative Petrol DCA | Rs 12.20 lakh |
Nexon facelift Smart Diesel MT | Rs. 11 lakh |
Nexon facelift Creative Diesel AMT | Rs. 13 lakh |
2023 Tata Nexon SUV Image Gallery