பிஎம்டபிள்யூ நிறுவனம் 2 சீரிஸ் கிரான் கூபே அடிப்படையில் பெர்ஃபாமென்ஸ் ரக மாடல் விற்பனைக்கு ரூ.46 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெர்ஃபாமென்ஸ் ரக எம் வரிசையில் வரவுள்ள பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் எம் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 179hp மற்றும் 280Nm டார்க் வெளிப்படுத்தி 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் பெறுகின்றது.
BMW 2 series M Performance
பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் M பெர்ஃபாமென்ஸ் சேபியர் கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கின்ற மாடலில் உட்புறத்தில் கருப்பு மற்றும் பழுப்பு நிற கலவையும் உள்ளது. சிறப்பு எடிசனில் கிரில், டிரைவ் செலக்டர், பேட்ஜ் மற்றும் பாட் விளக்கு போன்றவற்றுடன் M பெர்ஃபாமென்ஸ்க்கு ஏற்ற பாகங்களும் உள்ளன. முன்பக்க பம்பரில் உள்ள செருகல்கள் மற்றும் கிரில் மற்றும் விங் மிரர்கள் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
10.25 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று வயர்லெஸ் சார்ஜர், ஹெட்-அப் டிஸ்ப்ளே, ரிவர்ஸ் கேமரா மற்றும் 10-ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், அனைத்து பயணிகளுக்கும் மூன்று-புள்ளி இருக்கை பெல்ட்கள், EBD உடன் ABS, ISOFIX மற்றும் ரன் ஃபிளாட் டயர் ஆகியவை கொண்டுள்ளது.
Variants | Ex-showroom Price |
220i M Sport | Rs 43.5 lakh |
220i M Sport Pro | Rs 45.5 lakh |
220i M Performance Edition | Rs 46 lakh |