நின்ஜா ZX-4R ஆனது 399cc, இன்-லைன், நான்கு-சிலிண்டர், திரவ-குளிரூட்டப்பட்ட என்ஜின் பொருத்தப்பட்டு 14,500rpm-ல் 80bhp மற்றும் 13,000rpm-ல் 39Nm வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு-வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் க்விக் ஷிஃப்டரும் உள்ளது.
இசட்எக்ஸ்-4ஆர் மாடலில் நிசின் நிறுவன நான்கு-பிஸ்டன் ரேடியல் காலிப்பர்களுடன் முன்பக்கத்தில் இரட்டை 290mm டிஸ்க் பிரேக்கிங் கையாளப்படுகிறது, இருப்பினும் பின்புறம் ஆக்சிஸ் மாஸ்டர் சிலிண்டரைப் பெற்று 220 mm டிஸ்க் உடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளது. டயர் அளவுகள் 120/70-ZR17 முன் மற்றும் 160/60-ZR17 பின்புறம் பெற்றுள்ளது.
அடுத்தப்படியாக, ஒருவேளை நின்ஜா ZX-6R இந்தியா வந்தால் 636cc, இன்-லைன், நான்கு சிலிண்டர் என்ஜின் 13,000rpm-ல் 129bhp மற்றும் 10,800rpm-ல் 69Nm வெளிப்படுத்தும். இதில் ஆறு-வேக கியர்பாக்ஸ் மற்றும் கிளட்ச்லெஸ் அப் ஷிஃப்ட் மற்றும் டவுன் ஷிஃப்ட்களுக்கான க்விக் ஷிஃப்டரைப் பெறுகிறது.
முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனைக்கு வரவிருக்கும் கவாஸாகி நின்ஜா ZX-4R விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.