உலகின் முன்னணி மஹிந்திரா டிராக்ட்ர் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஸ்வராஜ் டிராக்ட்ர்ஸ் நிறுவனம் 40 முதல் 50 hp பிரிவில் 843 XM, 744 FE, 855 FE, 744 XT மற்றும் 742 XT என 5 மாடல்களை விற்பனைக்கு ரூ.6.95 லட்சம் முதல் ரூ.9.95 லட்சம் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
40-50 ஹெச்பி வகையிலான புதிய டிராக்டர் மாடல்களை தயாரிக்க இந்நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மாறுபட்ட புவியியல் மற்றும் நிலப்பரப்புகளில் சிறந்த முறையில் செயல்பட, ஆற்றல், நம்பகத்தன்மை மற்றும் அழகியல் ஆகியவற்றின் கலவையை வழங்குவதாக விளங்கும் என தெரிவித்துள்ளது.
Swaraj Tractors
ஸ்வராஜ் டிராக்டர்ஸ் புதிதாக அறிமுகப்படுத்திய டிராக்டர்களுக்கு சிறந்த செயல்திறன் மற்றும் தரத்தை பெற்றிருப்பதனால், ஆறு ஆண்டு அல்லது 6,000 கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது,
இந்த மாடல்களில் 6-ஸ்பீடு PTO, 4WD வரம்பில் மற்றும் டிஜிட்டல் கிளஸ்டர், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் பகல் நேர ரன்னிங் விளக்குகள் என நவீன அம்சங்களை கொண்டுள்ளது. டிராக்டர்கள் நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்புளை காட்டிலும் 8-10 சதவீதம் மேம்பட்ட எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.
1974 ஆம் ஆண்டு துவங்கிய ஸ்வராஜ் டிராக்டர் பயணத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு பெற்றுள்ளது. உள்நாட்டு டிராக்டர் உற்பத்தியாளர்களில் முதனமுறையாக இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி எங்கள் வாடிக்கையாளர் மட்டுமல்ல, ஸ்வராஜ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராகவும் உள்ளார் என குறிப்பிட்டுள்ளது.