டெஸ்லா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர், புதிய மாடல் 3 காரில் மேம்பட்ட வசதிகளுடன் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் அதிகரிக்கப்பட்ட ரேஞ்சு கொண்டதாக வந்துள்ளது. இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் தனது ஆலையை துவங்குவதற்கான பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருவதனால் அடுத்த சில ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம்.
முந்தைய மாடலை விட மாடல் 3 காருக்கான ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பினை டெஸ்லா மேம்படுத்தியுள்ளதால், ரேஞ்சு சற்று கூடுதலாக வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tesla Model 3
டெஸ்லா மாடல் 3 காரில் முன்பக்கத்தில் மிக மெலிதான பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய எல்இடி ஹெட்லைட் மற்றும் புதிய லோயர் கிரில் திருத்தப்பட்ட பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், டெஸ்லா புதிய 18 இன்ச் அல்லது 19-இன்ச் நோவா வீல்களை EV மாடலுக்கு வடிவமைத்துள்ள பின்புறம் புதிய எல்இடி டெயில்லைட்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா மாடல் 3 காரில் 248 hp பவர் வெளிப்படுத்தும் ரியர்-வீல் டிரைவ் தற்பொழுது 554 கிமீ ரேஞ்சு ( முன்பு 491 கிமீ வரை) கொண்டுள்ளது. 0-100kph நேரத்தை 6.1 வினாடிகள் வெளிப்படுத்தும். அதே நேரத்தில் 335 hp பவர் வெளிப்படுத்தும் டாப் மாடல் 677 கிமீ ( முன்பு 634 கிமீ வரை) ரேஞ்சு பெற்றுள்ளது. 0-100kph நேரத்தை 4.4 வினாடிகள் வெளிப்படுத்தும். பொதுவாக இரண்டு வேரியண்ட் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ வேகத்தை எட்டும்.
இந்திய சந்தைக்கு டெஸ்லா நிறுவனம், தனது மாடல்களை அறிமுகம் செய்வதற்கு புதிய ஆலையில் நிறுவு இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
View this post on Instagram