முனீச் IAA மோட்டார் ஷோவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எதிர்கால எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்த உள்ள டிசைனை Vision Neue Klasse மாடல் மூலம் அறிமுகம் செய்துள்ளது. செடான் ஸ்டைலை பெற்றுள்ள இந்த கான்செப்ட்டில் பல்வேறு அதிநவீன நுட்பங்களை கொண்டுள்ளது.
முழுமையான மின்சார வாகனங்கள் வடிவமைப்பினை பெற்று மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பினை கொண்டுள்ளது. ஜெர்மானிய வாரத்தை Neue Klasse என்பதற்கு ஆங்கிலத்தில் new class என்பது பொருளாகும்.
BMW Vision Neue Klasse
அடுத்த தலைமுறை பிஎம்டபிள்யூ EV இயங்குதளம் பற்றி தகவல் இன்னும் வெளிவரவில்லை, ஆனால் தற்போதைய இவி கார்களுடன் ஒப்பிடும்போது “30 சதவிகிதம் கூடுதல் ரேஞ்சு, 30 சதவிகிதம் வேகமான சார்ஜிங் மற்றும் 25 சதவிகித கூடுதல் செயல்திறனையும்” கொண்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட i Vision Dee கான்செப்ட்டின் அடிப்படையில் மேம்பட்டதாக வந்துள்ள Vision Neue Klasse அடிப்படையில் அடுத்த 24 மாதங்களுக்கு பிறகு பல்வேறு மாறுபட்ட பிளாட்ஃபாரத்தில் செடான் முதல் எஸ்யூவி வரை வெவ்வேறு விதமான பவர்டிரையின் ஆப்ஷனை கொண்ட மாடல்கள் வரவுள்ளது.
மிகவும் நவீனத்துவமான டிசைனை பெறுகின்ற Vision Neue Klasse கான்செப்டில் மிக நேர்த்தியான பிஎம்டபிள்யூ கிட்னி கிரில் மாற்றியமைக்கப்பட்டு, அதன் அருகே எல்இடி ஹெட்லைட் கொண்டதாக அமைந்துள்ளது. பல்வேறு டிசைன் அம்சங்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டதாக விளங்கும்.
இன்டிரியரில் அதிகப்படியான செயல்பாடுகளை கொண்டதாகவும் முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்டதாக விளங்க உள்ளது. டிஜிட்டல் கிளஸ்ட்டர் அமைப்பில் பல்வேறு அம்சங்களை கொண்டதாக Neue Klasse மாடல்கள் பெற்றிருக்கும்.
BMW Vision Neue Klasse pic.twitter.com/lL7LPTOfjL
— Automobile Tamilan (@automobiletamil) September 2, 2023
BMW Neue Klasse images