ஐந்தாம் தலைமுறை மினி கூப்பர் கார் எலக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ICE என்ஜின் சற்று தாமதமாக அறிமுகம் செய்யப்படலாம். IAA மொபைலிட்டி எனப்படுகின்ற முனீச் மோட்டோ ஷோ அரரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட EV பிளாட்ஃபாரத்தை கொண்டுள்ள கூப்பர் காரில் E மற்றும் SE என இருவிதமான வேரியண்டில் மாறுபட்ட பேட்டரி மற்றும் ரேஞ்சு கொண்டிருக்கின்று.
2024 Mini Cooper EV
மினியின் தாய் நிறுவனமான பிஎம்டபிள்யூ மற்றும் கிரேட் வால் மோட்டார் ஆகியவற்றுக்கு கீழ் செயல்படுகின்ற சீனாவில் உள்ள ஸ்பாட்லைட் ஆட்டோமோட்டிவ் புதிய எலக்ட்ரிக் மாடலின் மின்சார ஹேட்ச்பேக் ஒரு பெஸ்போக் EV பிளாட்ஃபாரத்தை உருவாக்கியுள்ளது.
மிக நேர்த்தியாக தொடர்ந்து தனது பாரம்பரியான வடிவமைப்பினை தக்கவைத்துக் கொண்டுள்ள மினி கூப்பர் எலக்ட்ரிக் காரில் க்ரோம் பாகங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. வட்ட வடிவமான ஹெட்லைட் வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட பம்பர், அகலமான கிரில் அமைப்பினை கொண்டதாகவும், பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிஎம்சி மினி கார்களில் 1959 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட இன்டிரியர் அமைப்பினை அடிப்படையாக கொண்டு மிக எளிமையான அதே நேரத்தில் அதிகப்படியான வசதிகளை கொண்டதாக உள்ளது.
வளைந்த டாஷ்போர்டில் 9.4-இன்ச் OLED இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை அமைப்பு உள்ளது. இந்த சிஸ்டத்தின் மென்பொருள் மினியின் சமீபத்திய ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இயங்குதளமாகும், இதனை சாம்சங் மூலம் உருவாக்கப்பட்டது. பல்வேறு கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளை பெற்றுள்ளது.
மினி கூப்பர் எலக்ட்ரிக் இரண்டு வகைகளில் கிடைக்கும். அவை 184hp பவர், 290Nm டார்க் வெளிப்படுத்தும் மோட்டார் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 40.7kWh பேட்டரி கொண்ட கூப்பர் E மாடல்உள்ளது, இது 305km ரேஞ்சு கொடுக்கின்றது.
டாப் வேரியண்ட் கூப்பர் SE மாடல் 218hp பவர் மற்றும் 330Nm டார்க் வழங்குகின்றது. 0-100kph நேரத்திற்கு 6.7 வினாடிகளுக்கு எட்டும். இதில் 54.2kWh பேட்டரி கொண்டு 402km ரேஞ்சு வழங்குகிறது. 95Kw சார்ஜ்ரை பயன்படுத்தி வெறும் 30 நிமிடங்களுக்குள் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் பெற முடியும்.
ஏற்கனவே கூப்பர் SE இந்தியாவில் விற்பனையில் உள்ள நிலையில், புதிய தலைமுறை மினி கூப்பர் எலக்ட்ரிக் மார்ச் 2024க்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.
மேலும் படிக்க – மினி கண்டரிமேன் சிறப்புகள்