பிரிமியம் எஸ்யூவி கார்களின் முன்னனி மாடலான ஃபார்ச்சூனர் எஸ்யூவி விற்பனை ஏப்ரல் 2016யில் ஃபோர்டு எண்டெவர் வீழ்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 2016யில் 560 எண்டெவர் எஸ்யூவி கார்கள் விற்பனை ஆகியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட எண்டெவர் எஸ்யூவி காரின் வரவால் பிரசத்தி பெற்ற ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் விற்பனை கடந்த ஏப்ரல் 2016யில் 506 கார்கள் என்ற நிலையில் சரிந்துள்ளது. விற்பனை சரிவினால் மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி முன்கூட்டியே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவேண்டிய கட்டாயத்தில் டொயோட்டா தள்ளப்பட்டுள்ளது.
மற்ற போட்டியாளர்களான பஜெரோ ஸ்போர்ட் 60 கார்கள் , சான்டா ஃபீ 26 கார்கள் , செவர்லே ட்ரெயில்பிளேசர் 13 கார்கள் மற்றும் சாங்யாங் ரெக்ஸ்டான் ஒரு கார் என விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
2016 ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி காரில் 160PS ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385Nm ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர் ஆப்ஷனில் உள்ளது.
200PS ஆற்றலை வழங்கும் 3.2 லிட்டர் TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450NM ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது.
[envira-gallery id=”4677″]