தற்பொழுது ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய எஸ்1 ப்ரோ ஜென் 2.0 மாடலில் 4Kwh லித்தியம் ஐயன் பேட்டரி கொண்ட S1 Pro மாடல் அதிகபட்சமாக 11Kw பவர், டாப் ஸ்பீடு 120kmph கொண்டு சிங்கிள் சார்ஜில் 195 கிலோமீட்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் 160 கிலோமீட்டர் ஈக்கோ மோடில் கிடைக்கலாம்.
Ola S1 Pro Gen 2 விலை ரூ.1,47,499
ஓலா எஸ்1 ஏர் மாடலில் ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. பொதுவாக, 4.5Kw பவரை வெளிப்படுத்துகின்ற ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 90KM/hr ஆகும். 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும்.
முழுமையான சிங்கிள் சார்ஜிங் மூலம் அதிகபட்சமாக 125 கிலோ மீட்டர் ரேஞ்சு வழங்கும் என ஓலா தெரிவித்துள்ளது.
Ola S1 air விலை ரூ.1,19,999
அடுத்து, ஓலா S1X 2Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 85 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 91 கிமீ பயணிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
3Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 90 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 151 கிமீ பயணிக்கலாம்.
Ola S1X 2 kwh – ₹ 89,999
Ola S1X 3kwh – ₹ 99,999
Ola S1X+ – 1,09,999
(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை)