ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் புதிதாக 4 எலக்ட்ரிக் பைக் கான்செப்ட்டினை காட்சிப்படுத்திய நிலையில், அந்த பைக்குகளுக்கான பெயர்களை வர்த்தகரீதியாக பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளது. அவை ஓலா டைமண்ட் ஹெட், ஓலா எம்1 க்ரூஸர், ஓலா எம்1 அட்வென்ச்சர், மற்றும் ஓலா எம்1 சைபர் ரேசர் ஆகும்.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் முதல் ஓலா எலக்ட்ரிக் பைக் மாடலாக வரவுள்ள ரோட்ஸ்டெர் ஸ்டைல் பெற்ற மாடலுக்கு எம்1 சைபர் ரேசர் என்ற பெயரை வைத்து வெளியிட உள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் ஸ்கூட்டர்களுக்கு எஸ்1 என்ற பெயரை அடிப்படையாக கொண்டுள்ளது.
Ola Electric Bike Names
ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் ஸ்டைல் மாடலுக்கு காட்சிப்படுத்தப்பட்ட பெயர் ஆன ஓலா டைமண்ட் ஹெட் என்ற பெயரையே வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கான்செப்ட் மாடல் எப்பொழுது விற்பனைக்கு வரும் எவ்வாறு நேரடியாக உற்பத்தி நிலைக்கு எடுத்துச் செல்ல ஓலா திட்டமிட்டுள்ளது போன்ற விபரங்கள் அடுத்த சில ஆண்டுகளில் தெரியவரும்.
அடுத்து, ஏறக்குறைய உற்பத்தி நிலை எட்டிவிட்ட M1 சைபர் ரேசர் ரோட்ஸ்டெர் ஸ்டைல் மாடல் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாக உள்ளது. மற்றபடி, க்ரூஸர் ரக மாடலுக்கு M1 க்ரூஸர், M1 அட்வென்ச்சர் என முன்பாக இணைத்துள்ளது.
அனைத்து கான்செப்டிலும் பொதுவாக எல்இடி ஹெட்லைட் கொண்டதாகவும், முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க்கு மற்றும் மோனோஷாக், இரு பக்க டயரில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஸ்போக் வீல் (அட்வென்ச்சர்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
விற்பனைக்கு வரும் பொழுது ஓலா எலக்ட்ரிக் பைக் ஆரம்ப விலை ரூ.3 லட்சத்திற்கு கூடுதலாக துவங்கலாம்.