பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள CE 02 எலக்ட்ரிக் மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.2.50 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சிஇ 02 மாடல் சர்வதேச சந்தையில் முதற்கட்டமாக கிடைக்க உள்ளது.
BMW CE 02 electric bike
ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டு மாற்றம் செய்யப்பட்ட உருவாக்கப்பட்டுள்ள சிஇ 02 மாடலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நுட்ப விபரங்களின் படி, இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறுகின்றது. பிஎம்டபிள்யூ CE 02 மாடலில் 2 Kwh பேட்டரி பேக் பெற்ற வேரியண்ட் 119kg கிலோ எடை கொண்டு 45km ரேன்ஜ் மற்றும் 45kph அதிகபட்ச வேகத்தை பெற்றதாக உள்ளது.
CE 02 15hp பவரை வழங்குகின்ற வேரியண்ட 90km ரேன்ஜ் கொண்டுள்ளது. இதன் எடை 132 கிலோ (ஒற்றை-பேட்டரி பதிப்பை விட 13 கிலோ அதிகம்) மற்றும் 95 கிமீ வேகம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு வேரியண்டும் 0.9kW நிலையான சார்ஜர் அல்லது விருப்பமான 1.5kW ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம்.
15hp வேரியண்ட் ஆனது சாதாரன சார்ஜரைப் பயன்படுத்தினால் 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 5 மணிநேரம் 12 நிமிடம் எடுக்கும், இது வேகமான சார்ஜரைப் பயன்படுத்தி 3 மணிநேரம் 30 நிமிடம் தேவைப்படும். குறைந்த வேகப் பதிப்பு, 0.9 kw பயன்படுத்தி, முழு சார்ஜ் செய்ய 3 மணிநேரம் 2 நிமிடம் ஆகும்.
சோதனை செய்யப்பட்டு வரும் மாடல்களை அனேகமாக, டிவிஎஸ் மோட்டார் தயாரித்து ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. மேலும், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.
Spotted the TVS-BMW CE-02 EV Scooter/bike test mules at Sringeri, Karnataka today.
Apparently the team is testing out these scooter/bikes in the Western Ghats.
I must say, it looks crazy & very unique. ???????? pic.twitter.com/pZJq7PGWqT
— Shreyas (@shrys_s) August 26, 2023