விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரே மாதத்தில் 2023 கியா செல்டோஸ் எஸ்யூவி காருக்கான முன்பதிவு எண்ணிக்கை 31,756 ஆக பதிவு செய்துள்ளது. செல்டோஸ் விலை ரூ.10.89 லட்சத்தில் ரூ. 19.99 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.
கடந்த ஜூலை 14 முதல் முன்பதிவு துவங்கப்பட்டு செல்டோஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் 13,424 முன்பதிவுகளை பெற்றது. 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல் தற்பொழுது வரை 5 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
Kia Seltos
1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக இன்டலிஜென்ட் மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 bhp மற்றும் 144 Nm டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 bhp மற்றும் 250 Nm டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் இன்டெலிஜென்ட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது.