ஹோண்டா மோட்டார்சைக்கிள் வெளியிட்டுள்ள, ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற SP160 பைக்கினை எதிர்கொள்ளும் போட்டியாளர்கள் யூனிகார்ன் 160 பஜாஜ் பல்சர் P150, N160, பல்சர் 150, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 2V, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 2V, சுசூகி ஜிக்ஸர் , மற்றும் யமஹா FZ-S V4 Dlx ஆகியவை இந்திய சந்தையில் கிடைக்கின்றது.
விற்பனையில் உள்ள ஹோண்டா யூனிகார்ன் 160 மற்றும் எஸ்பி 125 பைக்கில் இருந்து பல்வேறு அம்சங்கள், என்ஜின் உட்பட பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொள்ளுகின்றது. குறிப்பாக இந்த பைக்குகளின் விலை ரூ.1.09 லட்சம் முதல் ரூ.1.46 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கின்றது.
Honda SP160 vs Rivals
சந்தையில் முன்பாக இருந்த எக்ஸ்பிளேடு பைக்கிற்கு மாற்றாக வந்துள்ள ஹோண்டா SP160 மாடல் OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13.27 hp பவர், 14.6 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
போட்டியாளர்களில் அதிகப்படியான பவரை அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி மாடல் இருவிதமான மோடுகளை கொண்டு வெளிப்படுத்துகின்றது. இதற்கு அடுத்தப்படியாக, பல்சர் என்160, எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி மாடல்கள் உள்ளன. குறைந்த பவரை வெளிப்படுத்தும் யமஹா FZ-S Fi v4 டீலக்ஸ் 150சிசி முதல் 160சிசி பிரிவில் அமோக வரவேற்பினை கொண்டதாக விளங்குகின்றது.
மாடல்கள் | என்ஜின், பவர், டார்க் |
Honda SP160 | 162.71 cc , 13.27 hp at 7,500 rpm 14.58 Nm at 5,500 rpm, 5-Speed Gearbox |
Honda Unicorn 160 | 162.71 cc , 13.27 hp at 7,500 rpm 14.58 Nm at 5,500 rpm, 5-Speed Gearbox |
Hero Xtreme 160R 2V | 163 cc , 15,2 hp at 8,500 rpm 14 Nm at 6,500 rpm, 5-Speed Gearbox |
Bajaj Pulsar 150 | 149.5 cc , 14 hp at 8,500 rpm 13.25 Nm at 6,500 rpm, 5-Speed Gearbox |
Bajaj Pulsar P150 | 149.68 cc , 14.6 hp at 8,500 rpm 13.25 Nm at 6,500 rpm, 5-Speed Gearbox |
TVS Apache RTR 160 2V | 159.7 cc , 16.02 hp at 8,750 rpm (13.32 hp urban) 13.85 Nm at 7,000 rpm, 5-Speed Gearbox |
Suzuki Gixxer | 155 cc , 13.6 hp at 8,000 rpm 13.8 Nm at 6,000 rpm, 5-Speed Gearbox |
Yamaha FZ-S FI 4.0 | 149 cc , 12.4 hp at 7,250 rpm 13.3 Nm at 5,500 rpm, 5-Speed Gearbox |
Bajaj Pulsar N160 | 164.82 cc , 16 hp at 8,750 rpm 14.65 Nm at 6,750 rpm, 5-Speed Gearbox |
ஸ்போர்ட்டிவான டிசைன் மொழி, பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி மாடல் உள்ளது. கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளை அப்பாச்சி, ஜிக்ஸர், பைக்குகளும் வழங்குகின்றன. பல்சர் இந்த 150-160சிசி வரிசையில் மூன்று மாடல்களை வழங்கி வருகின்றது. டிஜிட்டல் கிளஸ்ட்டரை எஸ்பி 160 பெற்றாலும் கனெக்ட்டிவ் அம்சங்களோ டிசைனில் பெரிய அளவில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கவில்லை.
பிரேக்கி அமைப்பினை பொறுத்தவரை சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டு அனைத்து மாடல்களில் முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் அல்லது டிஸ்க் ஆப்ஷன் கிடைக்கின்றது. சஸ்பென்ஷன் அமைப்பில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் உள்ளது. பல்சர் 150 மட்டும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பருடன் வருகின்றது.
ஹோண்டா எஸ்பி 160 போட்டியாளர்களுடன் விலை ஒப்பீடு
போட்டியாளர்களில் ஹோண்டா யூனிகார்ன் 160 குறைந்த விலையிலும் அதிகபட்ச விலையை ஜிக்ஸர் மாடலும் கொண்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள விலை தமிழ்நாட்டின் ஷோரூம் விலை ஆகும்.
மாடல்கள் | ex-showroom Tamil Nadu |
Honda SP160 | ₹ 1,17,500 – ₹ 1,21,900 |
Honda Unicorn 160 | ₹ 1,08,400 |
Hero Xtreme 160R 2V | ₹ 1,21,911 – ₹ 1,33,107 |
Bajaj Pulsar 150 | ₹ 1,17,466 – ₹ 1,20,467 |
Bajaj Pulsar P150 | ₹ 1,16,781 – ₹ 1,19,782 |
TVS Apache RTR 160 2V | ₹ 1,19,420 – ₹ 1,26,220 |
Suzuki Gixxer | ₹ 1,39,036 – ₹ 1,45,136 |
Yamaha FZ-S FI 4.0 | ₹ 1,30,139 |
Bajaj Pulsar N160 | ₹ 1,30,688 |
Honda Sp160 Vs Rivals on-road price
ஹோண்டா எஸ்பி 160 உட்பட போட்டியாளர்களின் பைக்குகளின் கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை அடிப்படையான வாகனப் பதிவு, காப்பீடு உள்ளிட்ட அம்சங்களுடன் சில முக்கிய ஆக்செரிஸ் மட்டும் சேர்க்கப்பட்டதாகும். விலையில் மாறுபாடு இருக்கலாம்.
மாடல்கள் | on-road Tamil Nadu |
Honda SP160 | ₹ 1,39,150 – ₹ 1,43,780 |
Honda Unicorn 160 | ₹ 1,29,840 |
Hero Xtreme 160R 2V | ₹ 1,43,890 – ₹ 1,57,097 |
Bajaj Pulsar 150 | ₹ 1,38,456 – 1,41,651 |
Bajaj Pulsar P150 | ₹ 1,38,450 – ₹ 1,42,189 |
TVS Apache RTR 160 4V | ₹ 1,43,735 – 1,51,216 |
Suzuki Gixxer | ₹ 1,64,036 – ₹ 1,71,136 |
Yamaha FZ-S FI 4.0 | ₹ 1,52,980 |
Bajaj Pulsar N160 | ₹ 1,51,456 |
(on-Road price in Tamil Nadu)
இந்தியாவில் அதிக விற்பனை எண்ணிக்கையை 150-160cc சந்தையை பொறுத்தவரை பல்சர் 150, யமஹா FZ-S, டிவிஎஸ் அப்பாச்சி அடுத்தப்படியாக ஹோண்டா யூனிகார்ன், ஹீரோ எக்ஸ்ட்ரீம் , ஜிக்ஸர் போன்றவை முறையே வரிசைப்படி உள்ளன.