ஏதெர் நிறுவனம் வெளியிட்டுள்ள 450S vs 450X 2.9kwh vs 450X என மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பெர்ஃபாமென்ஸ், ரேஞ்சு உள்ளிட்ட அம்சங்களை ஒப்பீடு செய்து எந்த ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கலாம் என அறிந்து கொள்ளலாம்.
மூன்று ஸ்கூட்டர்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பினை பகிர்ந்து கொண்டாலும் பல்வேறு வித்தியாசங்களை பெற்றதக அமைந்துள்ளது. குறிப்பாக பேட்டரி, டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆகியவற்றில் மாறுபடுகின்றது.
Ather 450S vs 450X 2.9 kWh vs 450X
பொதுவாக மூன்று மாடல்களும் பல்வேறு அம்சங்களை ஒரே மாதிரியாக பகிர்ந்து கொள்ளும் பொழுதும் பேட்டரி ஆப்ஷனில் 450X டாப் வேரியண்டில் 3.7 Kwh பேட்டரி லித்தியம் ஐயன் வழங்கப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 150 கிமீ தொலைவு பயணிக்கும் திறனை கொண்டுள்ளது.
450X 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111 கிமீ ரேஞ்சு வழங்குவதுடன் பவர் மற்றும் டார்க் ஆகியவற்றில் 450X டாப் மாடலை போலவே அதிகபட்சமாக 6.4 Kw பவர் மற்றும் 26 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது.
அடுத்து குறைந்த விலை 450S மாடல் 2.9 .9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111 கிமீ ரேஞ்சு வழங்குவதுடன் பவர் மற்றும் டார்க் ஆகியவற்றில் 5.4 Kw பவர் மற்றும் 22 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. ஆனால் டாப் ஸ்பீடு மூன்று மாடல்களுக்கும் ஒரே மாதிரியாக 90Km/hr ஆக உள்ளது.
Ather 450 Specs | 450S | 450X 2.9Kwh | 450X |
மோட்டார் வகை | PMSM | PMSM | PMSM |
பேட்டரி | 2.9Kwh | 2.9kwh | 3.7kwh |
பவர் | 5.4kW | 6.4kW | 6.4kw |
டார்க் | 22 NM | 26 NM | 26 NM |
ரேஞ்சு (IDC) | 115 Km/charge | 111 Km/charge | 150Km/ch |
ரைடிங் ரேஞ்சு | 70-85 Km/charge | 70-85 Km/charge | 100-125km/ch |
அதிகபட்ச வேகம் | 90 Kmph | 90 Kmph | 90 Kmph |
சார்ஜிங் நேரம் | 8 hrs 36 Mins | 8 hrs 36 mins | 5 hrs 45 mins |
ரைடிங் மோடு | Smart Eco, Eco, Ride & Sport | Smart Eco, Eco, Ride, Sport & Wrap | Smart Eco, Eco, Ride, Sport & Wrap |
450S நான்கு ரைடிங் மோடுகள் SmartEco, Eco, Ride மற்றும் Sport. இதற்கிடையில், 450X ஸ்மார்ட் SmartEco, Eco, Ride, Sport, மற்றும் Wrap ஆகிய ஐந்து ரைடிங் மோடுகளைப் பெறுகிறது. சார்ஜிங் நேரத்தை பொறுத்தவரை வீட்டிலுள்ள சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்தால் 450S, 450X 2.9Kwh என இரண்டும் 8 மணி நேரம் 36 நிமிடமும், 450X மாடல் 5 மணி நேரம் 45 நிமிடமும் எடுத்துக் கொள்ளும்.
சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு
Specs | 450S | 450X |
முன் சஸ்பென்ஷன் | டெலிஸ்கோபிக் | டெலிஸ்கோபிக் |
பின் சஸ்பென்ஷன் | மோனோஷாக் | மோனோஷாக் |
பிரேக்கிங் சிஸ்டம் | CBS | CBS |
முன்பக்க பிரேக் | 200 mm டிஸ்க் | 220 mm டிஸ்க் |
பின்பக்க பிரேக் | 190 mm டிஸ்க் | 190 mm டிஸ்க் |
வீல் F/R | 90/90-12 (F/R) ட்யூப்லெஸ் | 90/90-12(F) , 100/80-12 (R) ட்யூப்லெஸ் |
மூன்று மாடல்களுமே சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் , டிஸ்க் உடன் கம்பைன்டு பிரேக்கிங் அமைப்பு என அனைத்திலும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கின்றது. பின்புற டயர் ஆனது 450X மாடலில் 100/80-12 ஆக உள்ளது.
பரிமாணங்கள் ஒப்பீடு
Specs | 450S | 450X |
எடை | 108 Kg | 111.6 Kg |
இருக்கை உயரம் | 780mm | 780mm |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 170mm | 170mm |
நீளம் | 1,891mm | 1,891mm |
அகலம் | 739mm | 739mm |
உயரம் | 1,114mm | 1,114mm |
வீல் பேஸ் | 1,296mm | 1,296mm |
சேசிஸ் | ட்யூப்லெர் | ட்யூப்லெர் |
மூன்று மாடல்களும் ஒரே மாதிரியான அளவுகளை பெற்றிருந்தாலும் 450s, 450x 2.9kwh என இரண்டும் 108 கிலோ எடை மட்டும் கொண்டுள்ளது.
மிக முக்கியமான வித்தியாசம் ஆக 450S மற்றும் 450X ஸ்கூட்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கிளஸ்ட்டரில் உள்ளது. குறிப்பாக குறைந்த விலை 450S மாடலில் எல்இசி கிளஸ்ட்டர் தொடுதிரை அம்சம் இல்லாமல் டீப் வியூ முறையில் வந்துள்ளது. ஆனால் 450X வேரியண்டுகளில் டச் ஸ்கீரின் வழங்கப்பட்டுள்ளது.
450s மாடலில் சாம்பல், வெள்ளை, பச்சை, காஸ்மிக் கருப்பு என நான்கு நிறங்களும் 450X ஸ்கூட்டரில் கூடுதலாக சிவப்பு மற்றும் கிரே என இரு நிறங்கள் பெறுகின்றது. பொதுவாக 22 லிட்டர் கொள்ளளவு உள்ள ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
வாகனம், பேட்டரி மற்றும் சார்ஜர் வாரண்டி 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ வழங்குகின்றது. ஏதெர் பேட்டரி புராடெக்ட் பெற்றால் 5 ஆண்டு அல்லது 60,000 கிமீ கிடைக்கும்.
ஏதெர் புரோ பேக் என்றால் என்ன ?
ஏதெர் புரோ பேக் மூலம் கூடுதலாக கட்டணம் செலுத்தி இரண்டு ஆண்டுகள் அல்லது 24 மாதங்கள் வரை ரைடிங் மோடு, ரைடிங் அசிஸ்ட், நேவிகேஷன், ரைடிங் ஸ்டேட்ஸ், ஃபைன்டு மை ஸ்கூட்டர், டோ அலர்ட், அவசகரகால எச்சரிக்கை, OTA மேம்பாடு, ஆட்டோஹோல்ட், அவசர கால பிரேக்கிங் விளக்கு, வாகனம் கீழே விழுந்தால் உடனடியாக மோட்டார் ஆஃப் ஆகும் வசதி ஆகியவற்றை வழங்குகின்றது.
கூடுதலாக, ஏதெர் 450S 2.9 Kwh புரோ பேக் கட்டணம் ரூ.14,001, ஏதெர் 450x 2.9 Kwh புரோ பேக் விலை ரூ.15,999 மற்றும் ஏதெர் 450x 3.7 Kwh புரோ பேக் பெற வேண்டுமென்றால் கூடுதலாக ரூ.23,078 செலுத்த வேண்டும்.
விலை ஒப்பீடு
ஏதெர் மூன்று ஸ்கூட்டர் மாடல்களும் வெவ்வேறு விதமான பேட்டரி மற்றும் ரேஞ்சு கொண்டிருந்தாலும் வடிவமைப்பில் ஒரே மாதிரியாகவும், மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் மாற்றமில்லாமல் விரும்பும் வகையில் அமைந்துள்ளது.
Model | Ex-Showroom Tamil Nadu |
---|---|
Ather 450S | Rs.1,29,949 |
Ather 450X(2.9kwh) | Rs.1,37,950 |
Ather 450X | Rs.1,44,871 |
Ather 450S Vs Ather 450X On-road Price in Tamil Nadu
ஏதெர் 450X, ஏதெர் 450S போட்டியாக, ஓலா எலக்ட்ரிக் எஸ்1 புரோ மற்றும் எஸ்1 ஏர் டிவிஎஸ் ஐக்யூப், விடா வி1, போன்ற மாடல்களுடன் பல்வேறு போட்டியாளர்கள் இந்த ஸ்கூட்டர்களுக்கு சவாலாக அமைந்துள்ளன.
Model | On-Road Tamil Nadu |
---|---|
Ather 450S | Rs. 1,36,500 |
Ather 450X(2.9kwh) | Rs.1,44,554 |
Ather 450X | Rs.1,51,596 |
கூடுதலாக புரோ பேக் விரும்பினால் 450X ஸ்கூட்டர் விலை ரூ.1,74,675, 450X 2.9kwh மாடல் ரூ.1,60,554 மற்றும் 450s விலை ரூ. 1,50,501 ஆகும்.