ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்கு ரூ.1.30 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 450X போலவே தோற்ற அமைப்பில் அமைந்துள்ள 450எஸ் ஆனது பேட்டரி மற்றும் சில வசதிகள் குறைக்கப்பட்டுள்ளது.
FAME 2 மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து மின்சார ஸ்கூட்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 450 எக்ஸ் மாடலில் 3.7 Kwh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கின்றது.
Ather 450S Price
450 எஸ் மாடல் 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி திறன் 2.9 kWh ஆக பெற்ற ஏதெர் 450S டாப் ஸ்பீடு 90Km/hr ஆக இருக்கும். ஏதெர் எனர்ஜி குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகின்றது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில், 450S மாடல் புளூடூத் இணைப்பு மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் LCD யூனிட் ஆனது ஸ்பீடோமீட்டர் மற்றும் திரையின் மையத்தில் மிகவும் எளிமையான அமைப்பைக் கொண்டுள்ள பெரிய, தடிமனான எழுத்துருவில் ஸ்பீட் காட்டப்பட்டுள்ளது. ரேஞ்சு எண்களிலும் காட்டப்படும்.
ஏதெர் 450X குறைந்த விலை 2.9 பேட்டரி திறன் ஆக பெற்ற மாடல் டாப் ஸ்பீடு 90Km/hr ஆக இருக்கும். இதன் ரேஞ்சு 111 கிமீ கொண்டதாக இருக்கும்.
450S மற்றும் 450X (2.9kWh) க்கான சார்ஜிங் நேரம் 8 மணிநேரம் 36 நிமிடங்கள் ஆகும். அதே சமயம் 450X (3.7kWh) க்கு ஐந்து மணிநேரம் 45 நிமிடங்கள் ஆகும்.
Ather 450S – ₹ 1,29,949
Ather 450X 2.9 Kwh – ₹ 1,37,950
Ather 450X 3.7 Kwh – ₹ 1,44,871
கூடுதலாக, ஏதெர் 450S 2.9 Kwh புரோ பேக் கட்டணம் ரூ.14,000, ஏதெர் 450x 2.9 Kwh புரோ பேக் விலை ரூ.16,000 மற்றும் ஏதெர் 450x 3.7 Kwh புரோ பேக் பெற வேண்டுமென்றால் கூடுதலாக ரூ.23,000 செலுத்த வேண்டும்.
450S நான்கு ரைடிங் மோடுகளை பெற்று அவை SmartEco, Eco, Ride மற்றும் Sport. இதற்கிடையில், 450X ஸ்மார்ட் SmartEco, Eco, Ride, Sport, மற்றும் Wrap ஆகிய ஐந்து ரைடிங் மோடுகளைப் பெறுகிறது.
மூன்று மாடல்களும் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் ஆகியவற்றை பெற்றுள்ளது. இதற்கிடையில், பிரேக்கிங் அமைப்பில் இரண்டு டயர்களிலும் டிஸ்க் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
450S மற்றும் 450X என இரண்டுக்கும் 90/90 முன்புறம் மற்றும் 100/80 பின்புற டியூப்லெஸ் டயர்களால் 12 அங்குல அலாய்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.