ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய SP160 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூனிகார்ன் 160 பைக்கில் உள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.
விற்பனைக்கு கிடைக்கின்ற SP125 பைக்கின் ஸ்டைலிங் அம்சத்தை தழுவியருந்தாலும், பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பெற்றதாக அமைந்துள்ளது.
Honda SP160
யூனிகார்ன் 160 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13.5 hp பவர், 14.6 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது.
17 அங்குல வீல் பெற்று இருபக்க டயர்களிலும் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக இரு விதமான வேரியண்ட் கொண்டுள்ளது. எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில்லைட் பெற்றதாக எஸ்பி 160 விளங்குகிறது.
முன்பக்கத்தில் 80/100-17 மற்றும் பின்புறத்தில் 130/70-17 டயர் பெற்று மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் டார்க் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் ஸ்பார்டன் ரெட், பேர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் பேர்ல் கிரவுண்ட் கிரே என 6 விதமான நிறங்கள் பெற்றுள்ளது.
டேக்கோமீட்டர், ஸ்பீடோமீட்டர், இரண்டு டிரிப் மீட்டர்கள், ஓடோமீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், சராசரி எரிபொருள் நுகர்வு, சராசரி வேகம் மற்றும் இன்னும் சிலவற்றைக் கொண்ட அனைத்தும் வழங்குகிற முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது.
ஹோண்டா புதிய SP160 விலை ரூ 1.18 லட்சம் மற்றும் டிஸ்க் பிரேக் பெற்ற மாடல் ரூ1.22 லட்சம் ஆகும். பண்டிகைக் காலத்துக்கு முன்பாக, அடுத்து மாத இறுதியில் டெலிவரி துவங்கலாம்.