வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், மிக குறைந்த பட்ஜெட் விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை S1X என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது. எஸ்1எக்ஸ் ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்திற்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் ஓலா தனது சமூக ஊடக பக்கங்களில் டீசர் ஒன்றை வெளியிட்ட நிலையில், அதன் ஹெட்லைட் தோற்றம் விற்பனையில் உள்ள எஸ்1 வரிசை போலவே அமைந்திருக்கின்றது. ஏற்கனவே விற்பனையில் உள்ள எஸ் 1 புரோ மாடல் ரூ. 1.40 லட்சம் மற்றும் எஸ் 1 ஏர் மாடல் விலை ரூ.1.20 லட்சம் விலையில் கிடைக்கின்றது.
Ola S1X escooter
குறிப்பாக ஆக்டிவா, ஜூபிடர் போன்ற 110சிசி பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் புதிய S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் சிறப்பான ரேஞ்சு வழங்குவதுடன் விலை ரூ. 1 லட்சம் விலைக்குள் அமையக்கூடும்.
அதிவேக ஸ்கூட்டராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற 85 கிமீ ரேஞ்சு மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ முதல் 85 கிமீ எட்டும் திறன் கொண்டதாக இருக்கும். சமீபத்தில் விற்பனைக்கு வந்த எஸ்1 ஏர் ஸ்கூட்டரை, போலவே பல்வேறு மெக்கானிக்கல் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2 கிலோ வாட் ஆரம்ப விலை ரூ.85,000 ஆக அறிமுகம் செய்யப்பட்டது. வரக்கூடிய புதிய மாடல் இதன் அடிப்படையில் இருக்கலாம்.