Stellantis குழுமத்தின் கீழ் செயல்படும் ஃபியட் கார்களை மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் விற்பனைக்கு கொண்டு வருமா என்பது பற்றி உறுதியாக உறுத்திப்படுத்தவில்லை.
ஸ்டெல்னைட்ஸ் குழுமம் இந்தியாவில் ஜீப் மற்றும் சிட்ரோன் பிராண்டுகள் விற்பனையில் உள்ளது. கடந்த இந்தியாவில் ஃபியட் ஜனவரி 2019-ல் உற்பத்தியை நிறுத்திய நிலையில் 2020-ல் முற்றிலுமாக வெளியேறியது.
Fiat cars
சமீபத்தில் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி விமர்சனம் தொடர்பான கூட்டத்தில், பேசிய பில்லி ஹேயீஸ் பல்வேறு தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். இதுபற்றி எக்னாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், ஃபியட் மீது இன்னும் அதிக அன்பு இந்தியாவில் உள்ளது, நாங்கள் இன்னும் ஃபியட் வாடிக்கையாளர்களை ஆதரிக்கிறோம், ஃபியட் மட்டுமல்லாமல் ஆல்ஃபா ரோமியோ உள்ளிட்ட நிறுவனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
ஆனால் உறுதியான திட்டங்கள் இல்லையென்றாலும், தொடர்ந்து ஃபியட் மீதான தொடர் கேள்விகள் மற்றும் ஆய்வுகள் இந்தியாவில் கொண்டு வருவதற்கான மீண்டும் எவ்வாறு செயல்படுத்துவது போன்ற விவாதங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக குறிப்பிட்டார்.
ஸ்டெல்னைட்ஸ் குழுமத்தின் கீழ் சுமார் 14 பிராண்டுகள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஃபியட் நிறுவனம் எலக்ட்ரிக் 500 மாடலை அறிமுகம் செய்த பின்னர் அமோகமான வரவேற்பினை ஐரோப்பா நாடுகள் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் பெற்று வருகின்றது.