டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி மற்றும் லேண்ட் க்ரூஸர் 70 என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அளவில் சில நாடுகளில் லேண்ட் க்ரூஸர் 250 மற்றும் பிராடோ என்ற பெயரில் சில நாடுகளிலும் கிடைக்கின்றது.
இதுதவிர, பாரம்பரியமான வடிவமைப்பினை பெற்ற லேண்ட் க்ரூஸர் 70 எஸ்யூவி மாடலும் சில மேம்பட்ட வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு லேண்ட் க்ருஸர் 250 ஆனது மேம்படுத்தப்பட்டுள்ளது.
Toyota Land Cruiser Prado
டொயோட்டாவின் எல்சி 300 பெரிய எஸ்யூவி காருக்கு கீழாக ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ள லேண்ட் க்ரூஸர் பிராடோ காரில் நாடுகளுக்கு ஏற்ப மாறுபட்ட என்ஜின் ஆப்ஷன்களை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய, ஜப்பானிய, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் 201 bhp பவரை வழங்கும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் ஃபார்ச்சூனரில் கிடைக்கும். இது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்படும். இந்த இன்ஜின் 2025 இறுதிக்குள் 48V மைல்ட் ஹைபிரிட் அம்சத்தைப் பெறும்.
லேண்ட் க்ரூஸர் 250 காரில் பெட்ரோல் விருப்பமானது 326 HP பவரை வழங்கும் 2.4-லிட்டர் யூனிட்டுடன் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் விருப்பமாகவும், 160 bhp பவர் வழங்கும் 2.7-லிட்டர் பெட்ரோல் ஜப்பான் மற்றும் கிழக்கு நாடுகளிலும் கிடைக்கும்.
TNGA-F இயங்குதளத்தை பெற்ற லேண்ட் க்ரூஸர் பிராடோ பரிமாணங்கள் 4,920 மிமீ நீளம், 1980 மிமீ அகலம், 1,870 மிமீ உயரம் மற்றும் 2,850 மிமீ நீளமான வீல்பேஸ் கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 221 மிமீ ஆக உள்ளது. முந்தைய காரை விட பெரியதாகவும், வடிவமைப்பு வாரியாக இது முந்தைய தலைமுறையிலிருந்து ஈர்க்கப்பட்ட பாக்ஸி மற்றும் ரெட்ரோ டிசைன் குறிப்புகளைக் கொண்டுள்ள காரில் புதிய லெக்ஸஸ் ஜிஎக்ஸ் போலவே உள்ளது.
இரண்டு விதமான டிசைன் அம்சங்களை லேண்ட் க்ரூஸர் பிராடோ பெறுகின்றது. FJ62 எஸ்யூவி தோற்றத்தால் ஈர்க்கப்பட்ட ஒன்று வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் பெற்றதாகவும், இது 5,000 எண்ணிக்கையில் மட்டும் கிடைக்கும். மற்றொன்று சதுர வடிவத்திலான எல்இடி ஹெட்லைட் கொண்டதாக அமைந்துள்ளது.
துவக்க நிலை மாறுபாட்டிற்கு 8 அங்குல தொடுதிரையை கொண்டு, டாப் வகைகளில் 12.3-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது. ஸ்டியரிங் வீலில் சுவிட்சுகள், அனைத்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுகிறது.
முழுநேர நான்கு சக்கர டிரைவ் சிஸ்டத்துடன் சென்டர் லாக்கிங் டிஃபரன்ஷியல் மற்றும் எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்படும் இரண்டு வேக பரிமாற்ற கேஸ் உயர்/குறைந்த வரம்புடன் வரும். இது வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு (VSC) மற்றும் ஒரு தானியங்கி வரையறுக்கப்பட்ட சீட்டு வேறுபாடு (Auto LSD) ஆகியவற்றையும் பெறுகிறது.
இந்தியா அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், வாகன தயாரிப்பாளர் அடுத்த ஆண்டு இறுதிக்குள் CBU முறையில் இறக்குமதி செய்து அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
Toyota Land Cruiser 70
ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற சந்தைகளில் இன்னும் விற்பனையில் இருக்கும் லேண்ட் க்ரூஸர் 70 எஸ்யூவி புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஹெட்லேம்ப்கள், புதிய கிரில் வடிவமைப்பு மற்றும் டொயோட்டா பேட்ஜிங் பெற்றுள்ளது. 4.5 லிட்டர் V8 டீசலுடன் அல்லது 2.8 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்றது. இந்த மாடல் இந்தியா வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.