பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட பிரவைக் டைனமிக்ஸ் நிறுவனம், ஆண்டுக்கு 10 லட்சம் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலை துவங்குவதற்கு சவுதி அரேபியாவின் சவுதி இந்தியா வென்ச்சர் ஸ்டுடியோ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தியா மட்டுமல்லமால் சவுதி அரேபியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா பகுதிகளுக்கு ஒரு மில்லியன் EV வரை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பிரவைக் ஆய்வு செய்ய உள்ளது.
Pravaig Dynamics
ஜூலை 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற G20 YEA இந்தியா உச்சிமாநாட்டில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பிரவைக் டைனமிக்ஸ் EV மற்றும் இராணுவ ரீதியான சிறப்பு நோக்கத்திற்கான வாகனங்களை இணைந்து உருவாக்கவும், வழங்கவும் மற்றும் சேவை வழங்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சவுதி இந்தியா வென்ச்சர் ஸ்டுடியோவின் தலைமை நிர்வாக அதிகாரி மன்சூர் அல்சனூனி, “பிரவைக் உடனான கூட்டு முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில் முனைவோர் முயற்சிகளைத் தூண்டுகிறது, இது EV, பேட்டரி மற்றும் AI துறைகளில் சிறப்பான முயற்சியாக இருக்கும் என குறிப்பிட்டார்.
ரூ.39.50 லட்சத்தில் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட பிரவைக் Defy எஸ்யூவி 500 கிமீ வரையிலான ரேன்ஜ் கொண்ட மாடல் 402 bhp மற்றும் 620 Nm டார்க்கை உருவாக்குகின்றன. பேட்டரி 2.50 லட்சம் கிலோமீட்டருக்கு மேல் நீடிக்கும் என்று கூறப்படுகின்றது. அடுத்த சில மாதங்களுக்கு பிறகு டெலிவரி வழங்கப்பட உள்ளது.